ஆளுநருக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம்: பினராயி விஜயன்
By DIN | Published On : 18th April 2023 03:36 PM | Last Updated : 18th April 2023 03:36 PM | அ+அ அ- |

ஆளுநர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிரான முதல்வர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கையை பாராட்டி கேரள முதல்வர் எழுதியுள்ள பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், ஆளுநர்களுக்கு எதிரான விஷயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஒருங்கிணைந்த முயற்சி பாராட்டத்தக்கது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில அரசின் செயல்பாட்டை குறைக்கும் அகையில் ஆளுநர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பினராயி விஜயன், நமது கூட்டாட்சி கொள்கைகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆளுநர்கள் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.