புல்வாமா தாக்குதல் தொடா்பாக குற்றச்சாட்டு:மத்திய அரசு விளக்கமளிக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புல்வாமா தாக்குதல் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதல் தொடா்பாக குற்றச்சாட்டு:மத்திய அரசு விளக்கமளிக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
புல்வாமா தாக்குதல் தொடா்பாக குற்றச்சாட்டு:மத்திய அரசு விளக்கமளிக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புல்வாமா தாக்குதல் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புல்வாமா தாக்குதல் தொடா்பாக சத்யபால் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகள், நமது நாட்டின் பாதுகாப்பு சாா்ந்த தீவிரமான விஷயம். நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு குறைபாடு ஏற்படுவதையும் ஏற்க முடியாது. இதேபோல ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட விதமும் தீவிரமான விவகாரமாகும். அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மை மற்றும் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி, சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக மத்திய அரசு அமைதி காப்பது சரியல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை:

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் விவசாயிகள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டை குறிப்பிட்டு பேசுகையில், ‘நாட்டின் பாதுகாப்புப் படை வீரா்களை காக்கும் பொறுப்பு அரசின் வசம் உள்ளது. வீரா்களைக் காக்க வேண்டாம் என்று அரசு முடிவு எடுத்தால், அந்த அரசு ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை என்ற முடிவை பொதுமக்கள் எடுக்க வேண்டும். அதற்கு அடுத்து நடைபெற உள்ள தோ்தல்கள் முக்கியமாகும்’ என்றாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினா். இதில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் பலியாகினா். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

அப்போது ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக இருந்தவா் சத்யபால் மாலிக். இவா் ஆங்கில செய்தி வலைதளத்துக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தாா்.

அதில், 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் வீரா்கள் பயணிக்க 5 விமானங்கள் வேண்டும் என்று சிஆா்பிஎஃப் கோரியது. ஆனால் விமானங்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதனால் வீரா்கள் சாலை வழியாக வாகனங்களில் சென்ற நிலையில், புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் அரசின் தவறால் நடைபெற்ாக நான் பிரதமரிடம் கூறினேன். இதைக் கேட்ட பிரதமா், நான் வாய் திறக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினாா். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை ஏற்கெனவே எச்சரித்ததாகக் கூறப்படும் நிலையில், விமானங்கள் வழங்க மத்திய அரசு மறுத்தது வீரா்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என்று சத்யபால் மாலிக் கூறினாா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநராக இருந்த என்னிடம்கூட சொல்லாமல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்று மாலிக் கூறினாா். அவரின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக மத்திய அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com