12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் உயர்நிலை குழு அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர், 'வாரத்தில் 48 மணி நேரம் பணி இருக்கும். நான்கு நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்தால் மற்றொரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும், ஒருவேளை கூடுதலாக வேலை செய்தால் கூடுதல் ஊதியம் வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்' என்று அவர் கூறினார். இந்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் உயர்நிலை குழு அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்ததற்காக கொண்டு வரவில்லை. சில தொழில்களுக்கு மட்டுமே சட்டம் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.