

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
3500 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் 20 சுகாதார நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. மேலும், 12 சுகாதார நிலையங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன என உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என இந்தியாவின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஐநாவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.