சூடான்: பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை குழு ஆலோசனை
By DIN | Published On : 21st April 2023 07:46 PM | Last Updated : 21st April 2023 07:49 PM | அ+அ அ- |

சூடான் நிலவரம் குறித்து உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியுறவுத் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சூடானிற்கான இந்திய தூதர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது, சூடானின் உண்மையான களநிலவரம் குறித்த நேரடி தகவல்களை பிரதமர் கேட்டறிந்தார்.
குறிப்பாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த வாரம் உயரிழந்த இந்தியருக்கு, பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். மேலும் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், விழிப்புடனும் ஏற்பட்டு வரும் களநிலவரம் குறித்து கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
சூடானில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை தடையின்றி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் கடந்த ஒரு வாரமாக இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்தியா் ஒருவா் உள்பட 400-க்கும் மேற்பட்டோா் இந்த வன்முறையில் உயிரிழந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...