தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஹிஜ்ரி 1444 ரமலான் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 21-04-2023 ஆம் தேதி அன்று மாலை ஷாவ்வால் மாத பிறை நாகூர் மற்றும் பல்வேறு இடங்களில் காணப்பட்டது.
ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 22-04-2023 ஆம் தேதி அன்று ஷாவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 
ஆகையால் ஈதுல் பித்ர் சனிக்கிழமை 22-04-2023ஆம் தேதி கொண்டாடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com