ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளைக் கடத்திய புகாரில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவும் (என்சிபி), தில்லி காவல் துறையும் இணைந்து, கடந்த பிப். 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் 3 பேரை கைது செய்தது. கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் தில்லியில் மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

அவரை இரு நாள்கள் சென்னை அழைத்து வந்து என்சிபி அதிகாரிகள் விசாரணை செய்தனா். இந்த விவகாரத்தை விசாரணை செய்த தில்லி அமலாக்கத் துறை, ஜாபா் சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும் இவ்வழக்கில் ஜாபர் சாத்திக்கின் கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் இன்று 5 பேரும் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 பேரின் நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மே 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com