
’லக்னௌவில் ஒரு கண்காட்சியில் நிறுவப்பட்ட $54,000(ரூ.44,98,000) மதிப்பிலான ஹெலிகாப்டர் மாதிரி திருடப்பட்டு விட்டதாக வெளியான செய்தி முற்றிலும் போலியானது’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
’தங்களால் இதுவரையில் லக்னௌவில், எந்த ஹெலிகாப்டர் மாதிரியையும் வைக்கப்படவில்லை’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தால், 2020இல் லக்னௌவில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கண்காட்சியில், வைக்கப்பட்ட சினூக் ஹெலிகாப்டர் மாதிரி காணாமல் போனது குறித்து பரப்பப்பட்ட செய்திகள் முற்றிலும் தவறானவை. சினூக் ஹெலிகாப்டர் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும், தாங்கள் இதுவரையில் லக்னௌவில் எந்த ஹெலிகாப்டர் மாதிரியையும் வைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னௌ இந்த நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் மாதிரி, கண்காட்சி முடிந்த பிறகும், மக்களின் பார்வைக்காக அங்கேயே வைக்கப்பட்டதென்றும், அந்த சமயத்தில் திருடப்பட்டு விட்டதென்றும் போலியான செய்திகள் வெளிவருவதாக கூறியிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.