
மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் இளையசகோதரர் பாபுன் பானர்ஜியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தினால் வாக்களிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹெளரா நகரத்தொகுதி வாக்காளரான பாபுன், வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்றபோது, அவரது பெயர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்தது.
"இந்தியத் தேர்தல் ஆணையம் இதுகுறித்து ஆராய்ந்து வருகிறது" என்று திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சாந்தனு சென் கூறினார்.
செய்தியாளர்களால் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, பாபுன் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். பாபுன் வங்காள ஒலிம்பிக் சங்கம் மற்றும் வங்காள ஹாக்கி சங்கத்தின் தலைவராகவும், வங்காள குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளராகவும், திரிணாமூல் காங்கிரஸின் விளையாட்டு பிரிவின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
ஹெளரா மக்களவைத் தொகுதிக்கு, எம்.பி பிரசுன் பானர்ஜியை திரிணாமூல் காங்கிரஸ் பரிந்துரை செய்ததையடுத்து, பாபுன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால், மம்தா பானர்ஜிக்கும் பாபுனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கட்சி தனக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்ததாகவும், பாபுன் கூறியிருந்தார். பாபூன் பாஜகவில் இணையப் போவதாகவும் வதந்தி பரவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.