பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் மே 20 அன்று காலமானார். அவர் செப்டம்பரில் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது ரசிகர்களுக்கு இந்த துயரச் செய்தி கிடைத்திருக்கிறது.
டபிள்யுxடபிள்யு என்றறியப்படும் மல்யுத்தத்தினைத் தொழிலாகக் கொண்ட ’பேட் போன்ஸ்’ என்றழைக்கப்படும் ஜெர்மன் நாட்டினைச் சேர்ந்த ஜான் க்ளிங்கர், தனது 40ஆவது வயதில் காலமானார். க்ளிங்கர் 2000ஆம் ஆண்டு காலத்தின் முற்பகுதியில் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு பல்வேறு போட்டிகளுக்காக, அவர் உலகம் முழுவதும் பயணம் செய்தார்.
" ’பேட் போன்ஸ்’ ஜான் க்ளிங்கர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டபிள்யுxடபிள்யு-வில் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவராக இருந்தார். அவர் டபிள்யுxடபிள்யு-வில் அனைத்து முக்கியப் பட்டங்களையும் வென்றார். மற்றும் 16 காரட் தங்கத்தினையும் வென்றிருந்தார். டபிள்யுxடபிள்யு-ல் கிட்டத்தட்ட 450 போட்டிகளில், கடினமாக உழைத்துத் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.
வெறும் 40 வயதில், ஜான் தனது ஓய்வுக்கு முன்பாகவே இறந்துவிட்டார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நாங்கள் பலமாக இருக்கிறோம்" என்று ஜெர்மனியின் மல்யுத்தப் போட்டி அமைப்பான டபிள்யுxடபிள்யு ஜெர்மனி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.