தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..?

கூகுள் தமிழ்நாட்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தொடங்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கூகுள் நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு..?

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தமிழ்நாட்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அமைக்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

நாட்டில் அதன் உற்பத்திக்காக தமிழ்நாட்டினைத் தேர்ந்தெடுத்தது. தைவானிய ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்துடன் புதிய உற்பத்தியினை அமைக்க ஒப்பந்தமிட்டுள்ளது.

கூகுள், இந்தியாவில் சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான தனது திட்டங்களை முன்வைத்துள்ளதும், ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து விலகி, இந்தியாவில் செயல்படுவதைத் தொடர்ந்து, நிறுவனங்களின் இந்த முடிவுகள் தமிழகத்திற்கு பயனளிக்கும்.

தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் பிற மூத்த நிர்வாகிகள், அமெரிக்காவில் உள்ள கூகுள் நிர்வாகத்துடன் தங்கள் மாநிலத்தை ஒரு உற்பத்தி இடமாக முன்வைக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

நுகர்வோர் மத்தியில் உயர்ரக ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் வணிகத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ”மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக முதலீடுகளை ஈர்த்து, மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

கூகுள் கடந்தாண்டு அக்டோபரில் தனது பிக்சல் 8 ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதாகக் கூறியது. மேலும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவுள்ளது.

மின்னணு ஏற்றுமதியில், தமிழ்நாடு 9.56 பில்லியன் டாலர்களுடன் முன்னணியில் உள்ளது, இது நாட்டின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com