
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், கம்பீருக்கும் தலைமைப் பயிற்சியாளர் பதவில் ஆர்வம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அவர் 100 சதவிகிதம் உத்தரவாதம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிப்பதாகவும், இல்லையெனில் விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கேகேஆர் அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான், கௌதம் கம்பீரை கேகேஆர் அணியின் ஆலோசகராக வைத்திருக்க விரும்புவதாகக் கூறி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியில் ஆலோசகராக இருக்க கம்பீருக்கு, அவர் தொகை ஏதும் குறிப்பிடாமல் காசோலை ஒன்றை அண்மையில் வழங்கியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.