
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடத்தப்பட்ட சகோதரிகள் இருவர் ஒரு வாரம் கழித்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஜம்முவின் ஜானிப்பூரில் கடந்த ஒரு வாரம் முன்பு 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சகோதரிகளை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ தாஸ் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் கடத்தி சென்றுள்ளதாக அந்த சிறுமிகளின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்க காவல் துறையினரால் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டி விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிக்க: அலுவலகப் பொருள்களை மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றுவிட்டார்: பாஜக எம்எல்ஏ
இந்நிலையில், நேற்று (பிப்.17) சத்தீஸ்கர் மாநிலம் பலூடாவில் சகோதரிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஷிவ தாஸ் மற்றும் மனோஜ் குமார் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜன.14 அன்று ஜம்முவின் தோதா மாவட்டத்தில் கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று (பிப்.17) பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.