மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலைதடுமாறி மாடியிலிருந்து விழுந்து இறந்த ஆசிரியை!

மெக்ஸிகோவின் கட்டிடத் தரக்குறியீடுகள் அமெரிக்காவில் பின்பற்றப்படுவதைப் போல மிகக் கடுமையாக இருந்திருந்தால், நான், எனது அன்பான சகோதரியை இப்படி ஒரு விபத்தில் இழந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலைதடுமாறி மாடியிலிருந்து விழுந்து இறந்த ஆசிரியை!

விடுமுறையைக் கழிக்க மெக்ஸிகோ சென்றிருந்த பென்சில்வேனிய ஆசிரியை ஒருவர், மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலை தடுமாறி மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.

50 வயது ஷரன் ரிகோலி சிஃபர்னோ, மேற்கு பென்சில்வேனியாவில் இயங்கி வரும் சார்லஸ் A நடுநிலைப்பள்ளியின் ஆசிரியை. கடந்த வாரத்தில் விடுமுறையைக் கழிக்கும் நோக்கில் மெக்ஸிகோவில் இருக்கும் தனது நண்பருடன் ரிஸார்ட் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அங்கே மாடி பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், உரையாடலினிடையே ஷரன் மிதமிஞ்சி சிரிக்கத் தொடங்கி இருக்கிறார். சிரித்துக் கொண்டே நிலைதடுமாறி மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து விட்ட ஷரனை, காயங்களுடன் துக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ஷரன் ரிகோலி இறந்து விட்டார், என அவரது சகோதரர் டேவிட் ரிகோலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஷரன் ரிகோலி குடித்திருந்த மதுவில் போதையூட்டக் கூடிய வேறு மூலப் பொருட்கள் ஏதாவது கலக்கப் பட்டிருக்கலாம் அல்லது அவர் அருந்தியது கெட்டுப் போன மதுவாக இருக்கலாம் எனத் தனது மகளின் மரணம் குறித்து  ஷரனின் தந்தை சந்தேகப் புகார் கூறிய போது, அதை மறுக்கும் விதமாகப் பதிலளித்த ஷரனின் சகோதரர்; ‘ஷரன் அருந்திய மதுவில் எந்தக் கலப்படமும் இல்லை, அவர் குடித்துக் கொண்டே, தலையைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு மிதமிஞ்சி சிரித்ததால் நிலை தடுமாறி விழுந்து, அதனால் கடுமையாகக் காயமுற்று இறந்தாரே தவிர இதில் மதுவின் பங்கு எதுவும் இல்லை’ என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதில் இருந்து;

ஷரனின் இந்தப் பரிதாபகரமான மரணத்துக்கு மெக்ஸிகோவில் கட்டிடத் தரக்குறியீடுகள் கடுமையாக இல்லாததும் ஒரு காரணமாகக் கருதப்படுவது தெரிந்தது.

‘மெக்ஸிகோவின் கட்டிடத் தரக்குறியீடுகள் அமெரிக்காவில் பின்பற்றப்படுவதைப் போல மிகக் கடுமையாக இருந்திருந்தால், நான், எனது அன்பான சகோதரியை இப்படி ஒரு விபத்தில் இழந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எங்களது குடும்பத்தைப் பொறுத்தவரை இது மிக, மிக மோசமான இழப்பு. என் அன்பான சகோதரியான ஷரன் ரிகோலி மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவரைக் காயங்களுடன், காப்பாற்ற இயலாமல் போனது எங்களது துரதிர்ஷடமே’ என்றும் டேவிட் ரிகோலி கூறினார்.

மரணித்த ஷரன் ரிகோலி, தான் பணிபுரிந்த பள்ளியில் மிகுந்த நம்பிக்கையையும், அன்பையும் சம்பாதித்தவராகவே கருதப்படுகிறார். ஷரனின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள அவரது பள்ளித் தலைவரான பிரையன் ஃபெராரா, பிட்ஸ்பர்க் ட்ரிபியூன் இதழுக்கு அளித்த இரங்கல் குறிப்பில் ‘ ஷரனின் மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையிலிருந்து திரும்பக் கூடிய நாள் இது, இப்போது போய் ஷரனுக்கு இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடாது, ஷரனை இழந்ததால் பள்ளியில் உண்டான வெற்றிடம் தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.’ எனக் கூறி இருக்கிறார்.

மரணமடைந்த ஷரன் ரிகோலிக்கு 15 மற்றூம் 17 வயதில் இரு வாரிசுகள் இருக்கிறார்கள்.

குடும்பத்தினரிடம் மட்டுமல்ல பணியிடத்திலும் நற்பெயரையே சம்பாதித்துள்ளவரான ஷரன் ரிகோலியின் இந்த துர்மரணம் நாடு தாண்டியும் கூட பலரை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்துவதாகத்தான் உள்ளது.

Image courtesy: focusnews.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com