14 வயது பள்ளி சிறுமியின் மரணம்! தூக்க முடியாத புத்தக சுமை தான் காரணமா? 

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14-வயது மாணவி புத்தக பையை தூக்கிக் கொண்டு மாடிப் படியில் ஏறும் போது மயங்கி விழுந்து பின்னர் உயிர் இழந்த அவலம் நிகழ்ந்துள்ளது. 
14 வயது பள்ளி சிறுமியின் மரணம்! தூக்க முடியாத புத்தக சுமை தான் காரணமா? 

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14-வயது மாணவி புத்தக பையை தூக்கிக் கொண்டு மாடிப் படியில் ஏறும் போது மயங்கி விழுந்து பின்னர் உயிர் இழந்த அவலம் நிகழ்ந்துள்ளது. 

கரிமாபாத் நகரில் உள்ள கௌடில்யா உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி பல கிலோ எடையுள்ள தனது புத்தக பையை தூக்கியவாறு மூன்று மாடிகள் ஏறிய நிலையில் மூன்றாவது தளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இந்தக் காட்சி அந்தப் பள்ளியின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. காலை 9 மணி அளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

“மாடிப் படிகள் ஏறிய பின்னர் தனது வகுப்பில் இருந்து மாணவி வெளியே வந்த பிறகு தான் மயங்கி விழுந்தார், நாங்கள் உடனே பள்ளியில் இருக்கும் மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றோம், மாணவியின் நாடித் துடிப்பை சரி பார்த்த அவர் ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகத் தெரிவித்தார், அதனால் பள்ளிக்கு அருகில் இருக்கும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம்” என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது. “மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதித்த மருத்துவர் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

ஆனால், மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் மரணத்திற்குப் பள்ளி நிர்வாகமே காரணம் என்று தெரிவித்துள்ளனர். “எங்களது மகளுக்கு எந்த வித உடல் உபாதையோ கோளாறோ கிடையாது, அப்படி இருக்கையில் எவ்வாறு மயங்கி விழுந்தவுடன் எங்களது மகள் உயிர் இழந்திருக்கக் கூடும்? மயங்கி விழுந்த எங்களது மகளுக்கு முதல் உதவி செய்வதிலும், சிகிச்சையளிப்பதிலும் பள்ளி தாமதித்துள்ளது, அதுவே எங்களது மகளின் மரணத்திற்குக் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளனர். 

பள்ளியின் முதல்வர் ஸ்ரீதர் கூறுகையில் மாணவியின் உடலில் நீரின் அளவு குறைந்து வறட்சி அடைந்ததன் காரணமாகவே அவர் உயிர் இழந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு மேற்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறை கூறியுள்ளது. 

இந்தச் சிறுமியின் மரணத்திற்குக் காரணம் புத்தக சுமையோ அல்லது பள்ளியின் கவனக்குறைவோ பழியை யார் மேல் எப்படிப் போடுவது என்று யோசிப்பதை விடுத்து, மேலும் இது போன்ற மரணங்கள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்வது என்று சிந்திப்பதே புத்திசாலித்தனம். ஏனென்றால் இப்படி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மாணவர்கள் இறந்து கிடப்பது ஒன்றும் புதிதான ஒரு கதை அல்ல. 

இதே வருடம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதிராபத்தில் உள்ள ஒரு பள்ளியில் சிறுவன் ஒருவரது சடலம் அவனது வகுப்பறையிலேயே கண்டெடுக்கப்பட்டது. வகுப்பிற்குச் சென்று பள்ளி பையை எடுத்து வரச் சென்ற மாணவன் திரும்பி வராததால் சென்று பார்த்த போது அவன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com