சமூக ஊடகத்தில் காதலைச் சொல்லி பரபரப்பான ஐஏஎஸ் டாப்பர் டினா டபியின் காதல், கல்யாணத்தில் முடிந்தது!

மணமகள் டினா டாபியைப் பற்றி மேலும் சொல்வதென்றால், மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது சக நண்பரும், தற்போதைய கணவரும், சக ஐஏஎஸ் டாப்பர்களில் ஒருவருமான அமீருல் சஃபியின் மீதான தனது காதலை வெளிப்படுத்த டினா சமூக 
சமூக ஊடகத்தில் காதலைச் சொல்லி பரபரப்பான ஐஏஎஸ் டாப்பர் டினா டபியின் காதல், கல்யாணத்தில் முடிந்தது!
Published on
Updated on
1 min read

2015 வருடத்தின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஐ ஏ எஸ் டாப்பர்களான டினா டாபிக்கும் (25), அதார் அமீருல் ஷஃபிக்கும்(26) காஷ்மீரத்தில் அழகிய பாகல்காம் நகரில் கடந்த வார இறுதியில் ஒருவழியாகத் திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிய விழாவாக நடந்து முடிந்திருப்பதாக ஷஃபியின் நண்பர் ஒருவர் செய்தி ஊடகங்களிடம் தகவல் அளித்திருக்கிறார். 

2015 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் டாப்பரான டினா டாபி, இந்தியாவில் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு முனைந்து தயார் செய்யும் அனைத்து இளம்பெண்களும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர். குறிப்பாக தலித் பின்னணி கொண்ட இளம்பெண்களுக்கு அவர் மிகச்சிறந்த வழிகாட்டி. அதே போல அவருக்கு மாலையிட்டிருக்கும் அமீருல் ஷஃபியும் காஷ்மீரத்தின் இளைஞர்கள் மட்டுமல்ல அவரைப் பற்றி அறிந்த அத்தனை இந்திய இளைஞர்களும் முன் மாதிரியாகக் கொள்ளத்தக்க அளவில் சிறந்த படிப்பாளி. இருவருமே ராஜஸ்தான் கேடரில் ஐஏஎஸ் அதிகாரிகளாகத் தற்போது பணியாற்றி வருகிறார்கள். இவர்களது திருமணம் காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பாகல்காம் விடுதி ஒன்றில் நடந்து முடிந்திருப்பதாகத் தகவல். மணமகன் அமீருல் கானின் வேண்டுகோளுக்கிணங்க அவரது இல்லத்தில் டெல்லியில் இருந்து வரவிருக்கும் விருந்தினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறப்பு விழா ஒன்றும் ஏற்பாடாகி இருக்கிறதாம். இவர்களது திருமண விழாவில் ஜம்மு காஷ்மீரின் பொதுப்பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மணமகள் டினா டாபியைப் பற்றி மேலும் சொல்வதென்றால், மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது சக நண்பரும், தற்போதைய கணவரும், சக ஐஏஎஸ் டாப்பர்களில் ஒருவருமான அமீருல் சஃபியின் மீதான தனது காதலை வெளிப்படுத்த டினா சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி அப்போதைய தலைப்புச் செய்திகளின் இடம்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் முதலில் சந்தித்துக் கொண்ட இடம், முசெளரியில் இருக்கும் இந்திய நிர்வாகப் பணிகளுக்கென பயிற்சி அளிக்கப்படும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமி என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com