லடாக்கில் நிரந்தர கட்டமைப்புகளை ஏற்படுத்தும் சீனா

பாதுகாப்பு படையினரை தங்க வைப்பதற்காக நிரந்தர குடியிருப்பு வசதிகளை சீனா கட்டமைத்துவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லடாக்கில், பாதுகாப்புப் படையினரை தங்க வைப்பதற்காக நிரந்தர குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை சீனா கட்டமைத்துவருகிறது.

இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் சீன படையினர் குவிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர கட்டமைப்புகளை அந்நாடு கட்டமைத்துவருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ராணுவ படையினரை  குடியமர்த்துவதற்காகவும் சீனா இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவும் இதேப்போன்ற குடியிருப்புகளை கட்டிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா, தங்களது பாதுகாப்பு விமான தளவாடங்களை மேம்படுத்திவருவதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர் கே எஸ் பதவுரியா ஜூலை முதல் வாரம் கவலை தெரிவித்திருந்தார். 

கடந்தாண்டு மே மாதம் முதல், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளை சீனா நிலைநிறுத்திவருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்தியாவும் ராணுவ வீர்ர்களை குவித்துவருகிறது.

வடக்கு மற்றும் தெற்கு பாங்காங் சோ ஏரிக்கரைகளில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளை திரும்பப்பெற்றாலும், ஹாட் ஸ்பிரிங், கோக்ரா போஸ்ட், தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய, சீன நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது.

கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்திய, சீன ராணுவப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் தங்கள் படைகளை கடந்த பிப்ரவரியில் விலக்கிக் கொண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com