மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது! செய்திகள் உடனுக்குடன்!!

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. 
மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது! செய்திகள் உடனுக்குடன்!!


புது தில்லி: 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.

மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.

ராஜ்நாத் சிங் பதவியேற்றார்

எம்.பி.யாக அமித் ஷா பதவியேற்பு

புதிய எம்.பி.க்களுக்கு வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். சற்று முன் பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்ர்.

ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்: மோடி

நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதிய கனவுகள், புதிய நம்பிக்கையோடு 17வது நாடாளுமன்றம் இன்று  கூடுகிறது. நாட்டிற்கு சேவையாற்ற மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தினார் மோடி.

பாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடித் தாக்குதல்: எதைச் சொல்கிறார் தெரியுமா அமித் ஷா?

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இதுவரை மோதிய போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை இந்தியா என்ற சாதனையைத் தக்க வைத்துக் கொண்டது. இதற்காக இந்திய கிரிகெட் அணிக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இடைக்காலத் தலைவராக வீரேந்திர குமாருக்கு பதவிப் பிரமாணம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை இடைக்காலத் தலைவராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி.யான வீரேந்திர குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com