சுங்​குடி சேலை​கள் தேக்​கம்: ரூ.15 கோடி வர்த்​த​கம் பாதிப்பு

​த​மி​ழ​கத்​தின் அனைத்து ஜவுளி கடை​க​ளுக்​கும், வெளி மாநி​லங்​க​ளுக்​கும் அனுப்ப முடி​யா​மல் சுங்​குடி சேலை​கள் தேங்​கி​யுள்​ள​தால், ரூ.15 கோ​டிக்கு மேல் வர்த்​த​கம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக வர்த்​த​
சுங்​குடி சேலை​கள் தேக்​கம்: ரூ.15 கோடி வர்த்​த​கம் பாதிப்பு


​த​மி​ழ​கத்​தின் அனைத்து ஜவுளி கடை​க​ளுக்​கும், வெளி மாநி​லங்​க​ளுக்​கும் அனுப்ப முடி​யா​மல் சுங்​குடி சேலை​கள் தேங்​கி​யுள்​ள​தால், ரூ.15 கோ​டிக்கு மேல் வர்த்​த​கம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக வர்த்​த​கர்​கள் தெரி​வித்​துள்​ள​னர். 

மது​ரை​யில் உற்​பத்தி செய்​யப்​ப​டும் சுங்​குடி சேலை​கள் தனித்​தன்மை வாய்ந்​தது. இங்கு உற்​பத்தி செய்​யப்​ப​டும் சேலை​கள் தமி​ழ​கம் முழு​வ​தும் உள்ள ஜவுளி கடை​க​ளுக்​கும், கர்​நா​ட​கம், மகா​ராஷ்​டி​ரம், ஒடிசா, மேற்​கு​வங்​கம், புது​தில்லி உள்​ளிட்ட பல்​வேறு வெளி​மா​நி​லங்​க​ளுக்​கும் அனுப்​பப்​ப​டு​கின்​றன. 

வழக்​க​மாக மாதம் ஒன்​றுக்கு 8 ஆயி​ரம் சேலை​கள் வரை உற்​பத்தி செய்​யப்​ப​டு​கின்​றன. கோடை காலத்​தில் சுங்​குடி சேலை​க​ளின் தேவை அதி​கம் என்​ப​தால், உற்​பத்தி 3 மடங்கு வரை அதி​க​மாக இருக்​கும். ஆனால், கோடைக்​காக அதிக எண்​ணிக்​கை​யில் உற்​பத்தி செய்​துள்ள சுங்​குடி சேலை​கள், ஊட​ரங்கு கார​ண​மாக விற்​ப​னைக்கு அனுப்ப முடி​யா​மல் தேங்​கி​யுள்​ளன. 

இது குறித்து மது​ரை​யைச் சேர்ந்த சுங்​குடி உற்​பத்​தி​யா​ளர் ஓ.ஜி. சர​வ​ணன் கூறி​யது: 
கோடை வியா​பா​ரத்​துக்​காக ஒவ்​வொரு ஆண்​டும் பொங்​கல் பண்​டி​கைக்​குப் பிறகு உற்​பத்தி தொடங்​கும். அதன்​படி, நிகழ் ஆண்​டில் உற்​பத்தி செய்த சேலை​கள் கரோனா தடை உத்​த​ரவு கார​ண​மாக விற்​பனை செய்ய முடி​யா​மல் தேங்​கி​யுள்​ளன. மது​ரை​யில் மட்டும் ரூ.15 கோடி மதிப்​பி​லான சுங்​குடி சேலை​கள் தேக்​கம் அடைந்​துள்​ளன. இத​னால், சுங்​குடி சேலை உற்​பத்​தி​யா​ளர்​க​ளும், மொத்த வியா​பா​ரத்​தில் ஈடு​பட்​டுள்​ள​வர்​க​ளும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர். 

சுங்​குடி சேலை உற்​பத்​தி​யா​ளர்​க​ளுக்கு முன்பு மின் மானி​யம் மற்​றும் உற்​பத்​தி​யின்​போது பயன்​ப​டுத்​தப்​ப​டும் மூலப் பொருள்​க​ளான மெழுகு, மண்​ணெண்​ணெய் ஆகி​யன மானி​யத்​தில் வழங்​கப்​பட்​டன. கரோனா தடை உத்​த​ரவு கார​ண​மாக, தொழில் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், ஏற்​கெ​னவே வழங்​கி​ய​தைப் போல மானிய உத​வி​களை வழங்​கி​னால், சுங்​குடி சேலை உற்​பத்​தி​யா​ளர்​க​ளுக்கு ஏற்​பட்​டுள்ள பாதிப்​புக்கு ஓர​ள​வுக்கு நிவா​ர​ண​மாக இருக்​கும் என்​றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com