சேலத்தில் அழியும் நிலையில் வேப்ப மரங்கள்
சேலத்தில் நுனி பட்டுபோகும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள வேப்ப மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ் நிலத்தின் உலக அடையாளமாக திகழும் வேப்ப மரங்கள், சேலம் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள், காடுகள் மற்றும் சாலையோரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த வேப்ப மரங்கள் கடந்த சில ஆண்டுகளாக பட்டு காய்ந்து கருகி வருகின்றன.
பட்டுபோன வேப்ப மரத்திற்கு மலர்தூவி நன்றி தெரிவிக்கும் குழந்தைகள்.
மற்ற அனைத்து மரங்களும் நன்கு செழித்து வளரும் இந்த மழை காலத்தில்கூட வேப்ப மரங்கள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிளையிலும் புதியதாக துளிர்த்து வரும் தளிர்கள் சில நாள்களிலேயே காய்ந்துவிடுகின்றன. பின்னர் நாளடைவில், மரம் முழுவதும் காய்ந்து விடுகிறது. இதுபோன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், ஏராளமான மரங்களில் இந்த பாதிப்பு உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில், வெடி வைத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு பதிலாக செடி வைத்து இயற்கையை காக்க வேண்டும் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிலம் 5 பவுண்டேசன் அமைப்பு இன்றைய தினம் என்னாச்சு வேப்பமரத்திற்கு என்ற தலைப்பில் வேப்ப மரத்தை காக்க வலியுறுத்தி குழந்தைகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.
வேப்ப மரத்திற்கு மலர்தூவி நன்றி தெரிவிக்கும் குழந்தைகள்.
கருப்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பட்டுபோன வேப்ப மரத்திற்கு இதுவரை தங்களை காத்தற்காக மலர்தூவி நன்றி தெரிவித்தனர்.
வேப்ப மரங்கள் பட்டுபோவது பூச்சிகள் அல்லது கொசுக்கள், வைரஸ் கிருமி தாக்கம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும், இதுதொடர்பாக ஆய்வு செய்து வேப்ப மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

