இடிந்துவிழும் நிலையில் தொடக்கப் பள்ளிக் கட்டடம்

தொடக்கப் பள்ளிக் கட்டடம் இடிந்துவிழும் நிலையில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் வீடுகள் இந்த நிலையில் இருக்குமா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 
இடிந்துவிழும் நிலையில் தொடக்கப் பள்ளிக் கட்டடம்
இடிந்துவிழும் நிலையில் தொடக்கப் பள்ளிக் கட்டடம்
Published on
Updated on
1 min read



ஊத்துக்கோட்டை: தொடக்கப் பள்ளிக் கட்டடம் இடிந்துவிழும் நிலையில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் வீடுகள் இந்த நிலையில் இருக்குமா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்து லட்சிவாக்கம் கிராமத்தில் குழந்தைகள் தொடக்கக் கல்வி கற்பதற்காக கட்டப்பட்டிருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் ஆறு மாத காலம் நிலைப்பதற்கு கூட கடினம் மிகவும் ஆபத்தான நிலையில் குழந்தைகளுக்கு அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே சுவர்களில் விரிசல்களும் மழைநீரை இலகுவாக உள்ளிழுக்கும் தன்மையும் உடையதுமாக இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது . 

பல நேரங்களில்கிராமசபை கூட்டங்களும் இந்த கட்டிடத்தில் தான் நடக்கின்றன.தேர்தல் நேரங்களில் இந்த கட்டிடம் தான் பயன்படுத்தப்படுகின்றன, அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்தக் கட்டிடத்திற்கு வெள்ளையடித்து அனைத்து ஓட்டைகளையும் மூடி மறைத்து வைத்துள்ளனர். 

இதேபோல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்திற்கு அருகிலேயே அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ளது. இதன் மேற்கூரை மிகவும் பழமையானது சாதாரண காற்று அடித்தாலே அவை கீழே விழுகின்றன. அங்கன்வாடிக்கு உள்ளே இருக்கும் குழந்தைகளுக்கும் ஆசிரியருக்கும் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்கின்றனர்.

குழந்தைகளின் பெற்றோரும், சில சமூக ஆர்வலர்களும் இதுபற்றி புகார் தெரிவித்தும் இதுவரையில் வர்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு மேற்கூரையில் வர்ணம் அடிக்கும் போது ஒருவர் மேற்கூரை உடைந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் கிராம வாசிகள்.

இதுபோன்ற தரமற்ற கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு லாபத்திற்காக ஒப்புதல் அளித்து வருகிறது அரசாங்கம் உடனடியாக சீரமைத்து புதிய மாற்று கட்டிடத்தை கட்டிக் கொடுக்க முடியவில்லை என்றால். கிராம மக்களே வேறு ஒரு மாற்று இடத்தில் ஓலைக் கொட்டகையில் அல்லது மரத்தின் நிழலில் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com