மனிதர்களுக்கு கரோனாவுக்கு எதிராக நோய்தடுப்பாற்றல் உருவாக நீண்டகாலமாகும்: டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

கரோனாவுக்கு எதிராக மனிதர்களுக்கு நோய்தடுப்பாற்றல் உருவாக  ‘ஹெர்ட் இம்யூனிட்டி’  நீண்ட காலமாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
மனிதர்களுக்கு கரோனாவுக்கு எதிராக நோய்தடுப்பாற்றல் உருவாக நீண்டகாலமாகும்: டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

கரோனாவுக்கு எதிராக மனிதர்களுக்கு நோய்தடுப்பாற்றல் உருவாக  ‘ஹெர்ட் இம்யூனிட்டி’  நீண்ட காலமாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு சமூக ஊடக நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:

கரோனா தொற்றுக்கு எதிராக ‛ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தைத் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெறுவதற்கு நீண்டகாலமாகும். எனவே  தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விரைவுப்படுத்த வேண்டும். அதன் மூலம்தான் ‛ஹெர்ட் இம்யூனிட்டி' உருவாக்குவது பாதுகாப்பானது. 

கரோனா தொற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே  ‛ஹெர்ட் இம்யூனிட்டி' என்பது சாத்தியமாகும். உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி 50 முதல் 60 சதவீத மக்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால்தான் "ஹெர்ட் இம்யூனிட்டி" முறை சாத்தியம்.

‛ஹெர்ட் இம்யூனிட்டி' முறை என்பது மக்கள் தொகையில் பெரும்பாலனவர்களை தொற்று நோய்க்கு எதிராக நோய்தடுப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுதல் ஆகும். அதாவது, தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைபவர்கள் அந்த நோய் தடுப்பாற்றலை பெறுதல் அல்லது தடுப்பூசி மூலம் நோய் தடுப்பாற்றல் பெறுவது மற்றொரு வகையாகும். இதன்மூலம் நோய்தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க செய்வதே தீர்வாகும்.

ஒரு தடுப்பூசி மூலம் தொற்றை தடுப்பது மிகவும் எளிதானது; மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகாமல் நாம் அதை விரைவாக அடைய முடியும். எனவே, இயற்கை தொற்று நோய்களின் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு, அவ்வாறு செய்வது மிகவும் நல்லது. எங்களுக்கு பல தொற்றுநோய்கள் இருக்கும், துரதிர்ஷ்டவசமாக நாம் காணும் இறப்புகளும் இருக்கும்.

உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி, சிகிச்சை முறைகள் இறப்பு விகிதங்களை குறைக்கவும், மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் 50 முதல் 60 சதவீத மக்களுக்கு நோய்த் தடுப்பாற்றல் கிடைத்தால்தான் ‛ஹெர்ட் இம்யூனிட்டி' முறை சாத்தியம். அந்த வகையில் இயற்கையாக அதைப் பெறுவதற்கு இன்னும் நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்குள்ள மக்களில் பொதுவாக 5 முதல் 10 சதவீதம் மட்டுமே நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளார்கள். இன்னும் சில நாடுகளில் மிக அதிகபட்சமாக 20 சதவீதம் மக்கள் மட்டுமே நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளார்கள்.

இயற்கையாக நோய்த்தடுப்பாற்றலைப் பெறுவதற்கு நாடுமுழுவதும் நோய்த்தொற்று, அலை அலையாகப் பரவ வேண்டும், அதன்மூலம் தடுப்பாற்றல் கிடைக்கும். இயற்கையாக மனிதர்கள் ‛ஹெர்ட் இம்யூனிட்டி' பெற வேண்டுமென்றால் 70 முதல் 80 சதவீதம் வரை நோய்த் தடுப்பாற்றலைப் பெற வேண்டும் என்றுகூட சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், உலக சுகாதார அமைப்பின்படி, தடுப்பூசி மூலமே மக்கள் நோய்த்தடுப்பாற்றலைப் பெறுவதுதான் பாதுகாப்பானது. மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும்.

ஆதலால், இயற்கையாக நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதைவிட, தடுப்பூசி மூலம் பெறுவதுதான் சிறந்த வழி. இயற்கையாக நோய்த் தடுப்பாற்றலைப் பெற அதிகமானோருக்கு நோய்த்தொற்றைப் பரவச் செய்ய வேண்டும், அதனால் ஆபத்துகளும், உயிரிழப்புகளும் நேரலாம்.

அதேசமயம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்பது இறப்பு வீதத்தைக் குறைக்க உதவும்.

எங்களின் கணக்கின்படி கரோனா தடுப்பூசி மனிதர்களுக்கான பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனங்களின் தடுப்பூசி தயாராகிவிடும். ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க சிறிது காலமாகும். மக்கள் நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்கத் தயாராக வேண்டும்.

கரோன தொற்று தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்த விஞ்ஞானி, உலக அளவில் 200 நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்து ஆய்வில் பல்வேறு கட்டங்களில் இருக்கிறார்கள். கரோனா தொற்று பாதிப்பின் தீவிரத்தை அறிந்து மிக வேகமாகத் தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.

பொதுவாகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி என்பது நீண்டகால நடைமுறை மற்றும் உழைப்பு செயல் முறையாகும், ஒவ்வொரு கட்டமாகத்தான் செல்ல முடியும். சூழல் கருதி தற்போது அனைத்தும் விரைவுபடுத்தப்படுகிறது, அதிகமான தடுப்பூசிகள் போட்டியில் உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன," என்று கூறினார்.

மேலும் கரோன தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வரும் பெரும்பாலான மக்கள் நடுநிலையான நோய்த்தடுப்பாற்றலை உருவாக்குகிறார்கள், அதாவது ஒரு தடுப்பூசி பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான நல்ல வாய்ப்பைக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.

கரோனாவுக்கு ஒருபோதும் தடுப்பூசி கிடைக்காதா என்ற அச்சம் குறித்து கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “இந்த நோய்த்தொற்றுடன் நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.” 

“இப்போது அது பயமாகதான் இருக்கிறது; எங்களிடம் ஒன்று இருக்கும் என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை. தடுப்பூசி இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வோம்? ஆனால் நாங்கள் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம். இப்போது, ​​இந்த நோய்த்தொற்றின் பரவலைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் என்னவென்று எங்களுக்குத் தெரியும், அதாவது சமூக இடைவெளியை பராமரித்தல், கை கழுவுதல், சுவாச சுகாதாரம் மற்றும் முகக்கவசங்கள் அணிவது போன்றவை,” அவை என்று சவுமியா சுவாமிநாதன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com