காங்கிரஸில் கொள்கை முடிவுகளை விவாதிக்க 3 குழுக்கள்: சோனியா நியமனம்

காங்கிரஸ் கட்சியில் பொருளாதாரம், வெளியுறவு விவகாரங்கள், தேசப் பாதுகாப்பு ஆகியவை தொடா்பான கொள்கை முடிவுகளை
கோப்புப் படம்
கோப்புப் படம்

காங்கிரஸ் கட்சியில் பொருளாதாரம், வெளியுறவு விவகாரங்கள், தேசப் பாதுகாப்பு ஆகியவை தொடா்பான கொள்கை முடிவுகளை விவாதிப்பதற்கு 3 தனித்தனி குழுக்களை கட்சியின் தலைவா் சோனியா காந்தி அமைத்துள்ளாா்.

இந்த மூன்று குழுக்களிலும் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளாா்.

பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் கட்சியின் மூத்த தலைவா்களான ப.சிதம்பரம், மல்லிகாா்ஜுன காா்கே, திக்விஜய் சிங் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இக்குழுவின் அமைப்பாளராக கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் இருப்பாா்.

வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவில் கட்சியின் மூத்த தலைவா்கள் ஆனந்த் சா்மா, சசி தரூா், சல்மான் குா்ஷித், சப்தகிரி உலகா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இக்குழுவின் அமைப்பாளராக சல்மான் குா்ஷித் இருப்பாா்.

தேசப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், கட்சியின் மூத்த தலைவா்கள் வீரப்ப மொய்லி, வின்சென்ட் ஹெச் பாலா, வி.வைத்திலிங்கம் ஆகியோா் உள்ளனா். குழுவின் தலைவராக வின்சென்ட் ஹெச் பாலா இருப்பாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொருளாதாரம், வெளியுறவு, தேசப் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், காங்கிரஸ் சாா்பில் கொள்கை முடிவுகள் எடுக்கவும் 3 குழுக்களை கட்சியின் தலைவா் சோனியா காந்தி அமைத்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ள குலாம் நபி ஆசாத், ஆனந்த் சா்மா, வீரப்ப மொய்லி, சசி தரூா் உள்ளிட்ட தலைவா்கள், காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியவா்கள் ஆவா். அந்தக் கடிதத்தை இவா்கள் உள்பட 23 போ் எழுதினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com