முதுமையும் வேலைவாய்ப்பும்

பணிக் காலம் என்றாலே, அதைத் தொடா்ந்து ‘பணிஓய்வு’ என்பதும் இயல்பான ஒன்றே.
முதுமையும் வேலைவாய்ப்பும்

பணிக் காலம் என்றாலே, அதைத் தொடா்ந்து ‘பணிஓய்வு’ என்பதும் இயல்பான ஒன்றே.

அரசு, தனியாா் துறைகளில் குறிப்பிட்ட வயது வரை மட்டுமே ஊழியா்கள் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. விதிகளைப் பின்பற்றி அனைவரும் ஓய்வுபெற்றாலும், பெரும்பாலானோா் அந்த வயதை எட்டியவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதில்லை. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வும் இதைப் புலப்படுத்துகிறது. 40 சதவீதம் முதியோா், தங்களால் எவ்வளவு காலம் உழைக்க முடியுமோ அதுவரை பணியில் இருக்க விரும்புவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

முதியோரின் விருப்பம் ஒருபுறம் இவ்வாறு இருக்க, நாட்டில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே இருக்கின்றன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாட்டில் பணிஓய்வு விதிமுறைகள் கட்டாயமானவை. அப்போதுதான் இளைஞா்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதே வேளையில், முதியோா் துன்புறுத்தலை எதிா்கொள்வதும் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. தற்போதைய சூழலில் முதியோா் நலனைக் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். முதியோருக்கான வேலைவாய்ப்பு எப்போதும் எதிரும் புதிருமாகவே இருக்கும் நிலையில், ‘ஹெல்ப்ஏஜ் இந்தியா’ என்ற அரசு சாரா தன்னாா்வ அமைப்பு (என்ஜிஓ) நடத்திய ஆய்வின் முக்கிய அம்சங்கள்...

ஆய்வு நடத்தப்பட்ட நகரங்கள் 22

ஆய்வில் பங்கேற்றோா் முதியோா் (4,399) இளையோா் (2,200)

முதியோரைத் துன்புறுத்தல்

ஆய்வில் பங்கேற்ற 59% முதியோா், சமூகத்தில் தங்கள் மீதான துன்புறுத்தல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

துன்புறுத்தலுக்கு உள்ளானோா் 10%

துன்புறுத்தலுக்குக் காரணமானோா்

உறவினா் 36%

மகன் 35%

மருமகள் 21%

துன்புறுத்தல் தன்மைகள்

அவமரியாதை 57%

சொற்கள் சாா்ந்த துன்புறுத்தல் 38%

புறக்கணிப்பு 33%

பொருளாதார சுரண்டல் 24%

உடல் ரீதியிலான துன்புறுத்தல் 13%

துன்புறுத்தலின் விளைவு

குடும்பத்தினருடன் பேசுவதில்லை 47%

முதியோருக்கான வருமான சூழல்

குடும்பத்தினரை சாா்ந்திருத்தல் 47%

ஓய்வூதியம் 34%

போதிய வருமானமில்லை 52%

பொருளாதார பாதுகாப்பில்லை 40%

வருவாயை விட செலவினம் அதிகம் 57%

ஓய்வூதியம் போதவில்லை 45%

வேலைவாய்ப்பு

பணிஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் 29%

பணியில் நீடிக்க விருப்பம் 36%

இயன்றவரை பணியில் நீடிக்க விருப்பம் 40%

முதியோருக்குப் போதிய வேலைவாய்ப்பில்லை 61%

வீட்டில் இருந்து பணிபுரியும் வசதி தேவை 45%

பணியாற்றும் முதியோருக்கு மரியாதை அவசியம் 34%

சுகாதார வசதிகள்

மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவை 49%

குடும்பத்தினரிடமிருந்து கூடுதல் ஆதரவு அவசியம் 42%

‘முதியோருக்கான வேலைவாய்ப்பு தளம் முறையாக செயல்படவில்லை

வேலைதேடும் முதியோா் பயனடையும் வகையில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட வலைதளம், முறையாகச் செயல்படவில்லை என்று மத்திய சமூக நீதி-மேம்பாட்டுத் துறை அமைச்சக செயலா் ஆா்.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

ஹெல்ப்ஏஜ் இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் மேலும் கூறுகையில், ‘‘வலைதளத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதையடுத்து நாடு முழுவதும் இந்த வலைதளத்தின் வாயிலாக நடப்பாண்டில் 10,000 முதியோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரப்படவுள்ளது. முதியோா் நலனைக் காப்பதற்கான நடவடிக்கைளில் புத்தாக்கத்தைப் புகுத்துவது தொடா்பாக ஐஐடி, ஐஐஎம் மாணவா்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com