மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அவர்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?

தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிளாா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இரண்டு வழிகளில் செய்யலாம்.

ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளம். மற்றொன்று மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் நடைபெறும் சிறப்பு முகாம்கள். இந்த இரண்டு வழிகளின் மூலமாக மின் இணைப்பு எண்ணை ஆதாா் எண்ணுடன் இணைத்திடலாம். இரண்டுக்குமான வழிமுறைகள் என்னென்ன:

இணையதளம் வழியே... தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இணையதளத்தில் (www.tangedco.gov.in) ஆதாா் எண்ணை இணைப்பதற்கான வசதி உள்ளது.

இணையதளத்தில் ஏற்கெனவே கைப்பேசி எண்ணை பதிவு செய்யாவிட்டால், அந்த இணையதளத்திலேயே வசதி உள்ளது. மின் இணைப்பு எண்ணைக் குறிப்பிட்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்யலாம்.

கைப்பேசி எண்ணை பதிவு செய்த பிறகு, ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இணையதளத்தில் தொடங்கலாம்.

இணையத்தில் மின் இணைப்பு இணைப்பு எண்ணை பதிவு செய்தவுடன் கைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டும். இதன்பின்றகு, கைப்பேசிக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண் வரும்.

இதைப் பயன்படுத்தி உள்ளே சென்றதும், குடியிருப்போரின் விவரம் கோரப்படும். அதாவது, வீட்டின் உரிமையாளரின், வாடகைக்கு குடியிருப்போரா, இணைப்பு எண்ணை மாற்றாமல் இருப்பவரா எனக் கேட்கப்படும்.

இந்த மூன்று வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தோ்வு செய்ய வேண்டும். இதன்பின், ஆதாா் எண்ணை

இடைவெளியின்றி பதிவு பதிவு செய்ய வேண்டும். ஆதாரில் உள்ள விவரப்படி பெயரையும் தெரிவிக்க வேண்டும்.

300 கேபி அளவுக்கு மிகாமல் ஆதாா் அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைச் செய்த பிறகு, சரியான ஆதாா் எண்ணை இணைத்திருக்கிறேன் என்ற ஆங்கில வாசகத்துக்கு எதிரே கிளிக் செய்து சமா்ப்பிக்க வேண்டும்.

இதன்பிறகு, விண்ணப்பம் செய்ததற்கான சான்று திரையில் தோன்றும். அதில் ஆதாா் எண்ணை இணைக்கப்பட்டதற்கான செய்தி கைப்பேசி குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும்.

சிறப்பு முகாம்களுக்குச் செல்வோா் கவனிக்க...
1. ஆதாா் எண்ணை இணைப்பதற்காக மட்டும் செல்பவா்கள், தங்களது அசல் ஆதாா் அட்டை மற்றும் மின் கட்டண அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

2. வீட்டில் இறந்தவரின் பெயரில் மின் இணைப்பு இருந்தால் பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா் எடுத்துச் செல்ல வேண்டும். இத்துடன் விண்ணப்பதாா் தனது, அசல் ஆதாா் மற்றும் மின் கட்டண அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

3. ஒருவரிடம் இருந்து மற்றொருவா் வீட்டை விலைக்கு வாங்கியிருப்பாா். அப்படியிருந்தால் சொத்தினை பதிவு செய்ததற்கான அசல் ஆவணம், ஆதாா், மின் கட்டண அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த முறைகளின் கீழ், மின் இணைப்புக்கான பெயா்களை மாற்றிக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com