'இருசக்கர வாகன விற்பனை அடுத்த 9 ஆண்டுகளில் இரு மடங்காகும்'

அடுத்த 9 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களின் விற்பனை இரு மடங்காகும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
'இருசக்கர வாகன விற்பனை அடுத்த 9 ஆண்டுகளில் இரு மடங்காகும்'
Published on
Updated on
2 min read

அடுத்த 9 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களின் விற்பனை இரு மடங்காகும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2023 முதல் 2028 வரை அனைத்து ஆட்டோமொபைல் பிரிவுகளிலும் இரு சக்கர வாகன விற்பனை பெருமளவில் அதிகரிக்கும் என்றும் 2028ல் அதிகபட்சமாக எண்ணிக்கை 2.59 கோடி முதல் 2.61 கோடி வரை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. 

2023 ஆம் ஆண்டில் 1.63 கோடியாக இருக்குக்கும் இருசக்கர வாகன விற்பனை 2032 ஆம் ஆண்டில் 3.07- 3.09 கோடியாக அதிகரிக்கும்.

1,000 பேருக்கு விற்கப்படும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2023 நிதியாண்டில் 121 ஆக உள்ள நிலையில், 2028 ஆம் நிதியாண்டில் இது 136-140 ஆகவும், 2032 நிதியாண்டில் 150-154 ஆகவும் உயரும். 

கார்கள் விற்பனை 2023ல் 39 லட்சமாக உள்ள நிலையில் இது 2028 ஆம் ஆண்டு 52-54 லட்சமாகவும் 2032 ஆம் ஆண்டு 62-64 லட்சமாகவும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

1,000 பேருக்கு தற்போது 25 கார்கள் என்ற விற்பனை, 2028 ஆம் நிதியாண்டில் 28-32 ஆகவும், 2032 ஆம் நிதியாண்டில் 35-39 ஆகவும் உயரும். 

வாகனங்கள் வாங்குவதற்கான நிதி கிடைப்பது, சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வாடிக்கையாளர்களின் வருமானம் அதிகரிப்பு, ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தரமான முறையான விற்பனை, வாகன உபகரண உற்பத்தியாளர்களின் விநியோகச் சங்கிலி சிக்கல்களைத் தீர்ப்பது, புதிய மாடல்கள் சந்தைக்கு வருவதில் சிக்கலைத் தீர்ப்பது ஆகியவற்றின் மூலமாக வாகன விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், 2030 ஆம் ஆண்டு வரையுள்ள ஏழு நிதியாண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக இந்தியா கிட்டத்தட்ட ரூ. 143 லட்சம் கோடியை செலவிடும், இது முந்தைய ஏழு ஆண்டுகளில் செலவழிக்கப்பட்ட ரூ. 67 லட்சம் கோடியைவிட இரண்டு மடங்கு அதிகம். 

இதில் மின் வாகனங்களுக்கு 36.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடாக இருக்கும், இது 2017-2023 நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம். 

2031 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சராசரியாக 6.7% வளர்ச்சியடையும். இது வேகமான பொருளாதார வளர்ச்சியாக இருக்கும். 

அதுபோல, 2031 ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் தோராயமாக 2 லட்சம் ருபாயில் இருந்து 3.74 லட்சமாக உயரும் என்றும் கிரிசில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com