20% நாடுகளில் மட்டுமே பாலியல் கல்விக்கான சட்டங்கள்!

மனித வாழ்வின் அடிப்படைகளுள் ஒன்று பாலியல் சுகாதாரம். பாலியல் சுகாதாரம் குறித்து பொதுவெளியில் பேசப்படுவதே அபத்தமானது என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. 
20% நாடுகளில் மட்டுமே பாலியல் கல்விக்கான சட்டங்கள்!



மனித வாழ்வின் அடிப்படைகளுள் ஒன்று பாலியல் சுகாதாரம். பாலியல் சுகாதாரம் குறித்து பொதுவெளியில் பேசப்படுவதே அபத்தமானது என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. 

இணைய வசதிகள் பெருகியுள்ள காலகட்டத்தில் பாலியல் சுகாதாரம் குறித்த தவறான செய்திகளும் தகவல்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. 

பாலியல் சுகாதாரம் தொடர்பான அடிப்படை புரிதலை மாணவப் பருவத்திலேயே சிறார்களுக்கு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். 
சரியான தகவல்கள் அவர்களிடம் சென்று சேர்ந்தால், பாலியல் சுகாதாரம் தொடர்பான குற்றங்களும் சமூகத்தில் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்; பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் பெருமளவில் குறையும். 

மகளிர் மேம்பாட்டுக்கான அடிப்படையாக பாலியல் கல்வி திகழும். 

மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாடு, மனிதவளத்தைத் திறம்படப் பயன்படுத்துதல், பாலியல்சார் நோய் பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் பாலியல் கல்வி மூலமாக ஏற்படும். 

சர்வதேச அளவில் பாலியல் கல்வி எத்தகைய நிலையில் உள்ளது என்பதை யுனெஸ்கோ ஆராய்ந்தது. அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

பாலியல் கல்வி என்பது...
பாலியல் சுகாதாரம், கண்ணியம், உடல்நலப் பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்த அறிவு, திறன், கொள்கைகளை மாணவர்களிடையே ஏற்படுத்துதல். 

பாலியல் கல்விக்கான முக்கிய கருத்துருக்கள்
* பாலியல்சார் உறவுகள்
* கொள்கைகள், உரிமைகள்
* பாலினத்தைப் புரிந்துகொள்ளல்
* வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு
* சுகாதாரத் திறன்
* மனித உடல் வளர்ச்சி
* பாலியல் நடத்தைகள்
* பாலியல் சுகாதாரம்

பாலியல் கல்விக்கான சட்டங்கள்
விரிவான சட்டங்களை
கொண்டுள்ள நாடுகள் - 20%
தேசிய கொள்கைகளை
கொண்டுள்ள நாடுகள் - 39%
கல்வித் திட்டங்களை
கொண்டுள்ள நாடுகள் - 64%

விரிவான சட்டங்களை கொண்டுள்ள சில நாடுகள்
* ஆர்ஜென்டீனா
* லைபீரியா
* மால்டோவா
* டோகோ
* பிலிப்பின்ஸ்

கட்டாயமாக்கியுள்ள சில நாடுகள்
* ஸ்வீடன்
* ஆர்ஜென்டீனா
* கொலம்பியா
* பெரு
* தாய்லாந்து
* வியத்நாம்

பாலியல் கல்வியைக் கட்டாயமாக்கியுள்ள நாடுகள்
* தொடக்கப் பள்ளிகளில் கட்டாயம் - 68%
* இடைநிலைப் பள்ளிகளில் கட்டாயம் - 76%
* அரசுப் பள்ளிகளில் கட்டாயம் - 87%
* தனியார் பள்ளிகளில் கட்டாயம் - 50%

பாலியல் கல்வியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நாடுகள்
* பணியில் இணைவதற்கு முன்பே பயிற்சி - 41%
* பணியில் இணைந்தபிறகு பயிற்சி - 80%

பள்ளிகளின் பங்கு
* கருத்தடை வசதிகள் கிடைக்கச் செய்வதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கை வழங்கியுள்ள நாடுகள் - 13 %

* பாலியல் சுகாதாரத்தை உறுதி செய்யும் பொறுப்பைப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ள நாடுகள் - 74%

பாலியல் கல்வி கண்காணிப்பு
* ஆசிரியர்களின் கற்பித்தல் மூலமாகக் கண்காணித்தல் - 37% நாடுகள்
* மாணவர்களிடம் ஆய்வு நடத்துவதன் மூலமாகக் கண்காணித்தல் - 38% நாடுகள்

பாலியல் கல்வியை நிர்வகிக்கும் அமைச்சகம் (நாடுகள்)
* மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து கல்வி அமைச்சகம் - 85%
* தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து கல்வி அமைச்சகம் - 23%
* கல்வி அமைச்சகம் மட்டும் - 10%
* மற்ற அமைச்சகங்கள் - 6%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com