மலேசிய விமானம் மாயமாகி 10 ஆண்டுகள்.. பதில் கிடைக்காத துயரங்கள்

மலேசிய விமானம் மாயமாகி 10 ஆண்டுகள் கடந்தும் பதில் கிடைக்காத துயரங்களாகவே நீடிக்கிறது.
மலேசிய விமானம் மாயமாகி 10 ஆண்டுகள்.. பதில் கிடைக்காத துயரங்கள்
Vincent Thian
Published on
Updated on
2 min read

கிரேஸ் சுபத்திரை நாதன் படித்து சட்டப்படிப்பில் பட்டம் பெற்று, திருமணமாகி, புதிய சட்ட நிறுவனம் தொடங்கி, இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டார். ஆனால், அவரது வாழ்க்கையின் ஒரு பகுதிமட்டும் ஒரே இடத்தில் உறைந்துநிற்கிறது.

அந்த துயரத்துக்கு இதுவரை பதில் கிடைக்காமல் நீடிக்கிறது. அதுதான், 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசிய விமானம் மாயமானபோது, அதில் பயணித்த தனது தாயின் இழப்பு.

இதுவரை அவருக்கு இறுதிச் சடங்கு போன்ற எந்த நிகழ்வும் நடத்தப்படவில்லை. 35 வயதாகும் கிரேஸ் தனது தாயைப் பற்றி பேசும்போதும், அவர் இருப்பது போன்றே பேசிக்கொண்டிருக்கிறார். கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் ஆனபோது, தன்னுடன் இருக்க வேண்டிய தாய் அன்னே கேதரின் டெய்ஸி இல்லாததால், அவரது புகைப்படத்தை கையிலேந்து வந்துள்ளார்.

எம்எஸ்370 ரக விமானம் காணாமல் போனதன் 10 ஆம் ஆண்டு நிறைவாகிவிட்டது. காணாமல் போனவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களில் முன்னிலையில் இருப்பவர் கிரேஸ். காணாமல் போனவர்களின் நிலை தெரியாமல், சின்னாபின்னமாகிப் போன குடும்பங்களின் துயரத்தை, இந்தப் போராட்டம் உயிரோட்டமாக இருப்பதன் மூலமே துடைக்க முடியும் என்று நம்பினார்.

இந்த போராட்டத்தினூடே, நான் என்னை வளர்த்துக்கொண்டே, குடும்பத்தை உருவாக்கினேன், ஆனாலும் தொடர்ந்து மாயமான விமனத்தைத் தேடும் பணியையும் தொடருவதற்கு வலியுறுத்தினேன். தொடர்ந்து அப்பணி நடைபெறுவதை உறுதிசெய்துகொண்டே இருந்தேன், அதிலிருந்து விடுபடவில்லை என்கிறார்.

பொதுவாக, எனது மூளைக்கு தெரிகிறது, மீண்டும் நான் என் தாயைப் பார்க்கப்போவதில்லை என்று, ஆனாலும் கூட, அதனை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, உணர்வுப்பூர்வமாக அது என்னை பாதிக்கிறது. உண்மைக்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் இடையே ஒரு இணைப்பு இல்லாமல் இடைவெளிதான் நீடிக்கிறது என்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, மலேசியாவிலிருந்து 239 பேருடன் புறப்பட்ட போயிங் 777 விமானம் ரேடார் கண்காணிப்பிலிருந்து விலகியது. அது பெய்ஜிங்கை அடையவேயில்லை. அதுதான் அந்த விமானம் சென்றுசேர்ந்திருக்க வேண்டிய இடம். புலனாய்வு அதிகாரிகள் கூறுவது என்னவென்றால், அந்த விமானத்தில் இருந்த ஒரு சிலர்தான், வேண்டுமென்றே, விமானத்தின் தொடர்பை துண்டித்து விமானம் கடலில் விழுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று.

இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானத்தில் பறந்து மாயமானவர்களின் குடும்பத்தினரின் ஒரே கோரிக்கை நீதியும், பதிலும்தான். இன்னமும் பலரின் குடும்பத்தினர், விமானம் கடலில் விழுந்திருக்கும் என்பதை நம்ப மறுத்து, தனது குடும்ப உறுப்பினர் மீண்டும் வருவார் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.

ஒரு வலியானது என்னவோ அவ்வளவு எளிதாக வந்துவிடுகிறன், ஒரு ஒலியாலோ ஒரு பொருளாலோ அல்லது ஒரு பூவாலோ கூட வந்துவிடுகிறது என்கிறார் விமானத்தில் தனது ஒரே மகனை இழந்த லி எர்யூ.

என்னைப் பொருத்தவரை எனது மகன் அந்த விமானத்தில் இருக்கிறார், என்னைச் சுற்றி எங்கேயோதான் அவர் இருக்கிறார். இல்லையென்றால், எதோ ஒரு வர முடியாத தீவில் அவர் இருக்கலாம். ஒரு நாள் நிச்சயம் வருவார் என்று தனது மகன் அடிக்கடி படிக்கும் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு சொல்கிறார்.

இப்படி, நாள்கள் ஆண்டுகளகாகக் கடந்து போனாலும், ஒரு பதில் கிடைக்காத துயரம் என்பது முடிவுக்கே வருவதில்லை என்பதையே இவர்களது பேச்சு காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com