
தேர்தல் ஆணையத்தின் மோசடிகளும் முறைகேடுகளும் நடைபெறுவதாக நாட்டின் எதிர்க்கட்சித் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
குற்றச்சாட்டுகளுக்குச் சான்றாக பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலை எடுத்துப் பல்வேறு ‘அதிசயங்களை’ப் பட்டியலிட்டார். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் நடைபெறுகின்றன.
தொடர்ந்து, தற்போது தேர்தல் ஆணையத்தின் உபயமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிறைய வாக்காளர் பட்டியல் அதிசயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தொடரும் அதிசயங்கள்:
57 வயது அப்பாவுக்கு 72 வயது மகன்
பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் 57 வயதான ராஜ்கமல்தாஸ் என்ற அப்பாவுக்கு 72 வயதான மகன்!
ராஜ்கமல்தாஸுக்கு மொத்தம் 50 குழந்தைகள். இளையவருக்கு வயது 28, இவர்களில் மூத்தவருக்கு வயது 72.
எல்லாரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பது கூடுதல் அதிசயம்!
125 வயது சாதனை!
வாக்காளர் அடையாள அட்டையிலுள்ள மின்டா தேவி என்ற பெண்ணுக்கு வயது 125! பிறந்த தேதி 15.7.1900. பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
ஆறுமுகம்!
மகாராஷ்டிரத்திலுள்ள பல்ஹர் மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலில் சுஷாமா குப்தாவின் விவரங்கள், ஆறு இடங்களில் வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்களுடன்!
மூன்று வாக்காளர் அட்டை!
கர்நாடகத்தைச் சேர்ந்த ஷகுன் ராணி என்ற 72 வயது பெண்ணுக்கு ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் மூன்று வெவ்வேறு வாக்குச் சாவடியில் வாக்காளர் அட்டை உள்ளது.
முகவரி ’பூஜ்ஜியம்’
பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான வீடுகளின் முகவரி 0, - , # எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.