25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிய கம்யூ. விலகலா? நாளை தெரியும்!

தொகுதிப் பங்கீடு விஷயத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிய கம்யூ. விலகப் போவதாக வெளிவரும் செய்திகள் பற்றி...

DMK

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. கொடிகள் - படம்: கோப்பிலிருந்து

Published On :18 மார்ச் 2026, 6:29 pm IST

திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி விலகப் போகிறதா?

கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட குறைவான இடங்கள் கிடைத்தால் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மார்க்சிய கம்யூனிஸ்ட் எடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகளைவிட 3 தொகுதிகளைக் கூடுதலாக காங்கிரஸ் பெற்றிருக்கிறது.

புதிதாகக் கூட்டணியில் வந்து இணைந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி அளிக்கப்பட்ட நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடவும்  கூடுதலான தொகுதிகளை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் இன்னமும் தொகுதிப் பங்கீடு எட்டப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இதே கூட்டணியில் கடந்த முறை தலா 6 இடங்களில் போட்டியிட்டு, தலா இரு இடங்களில் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுமே தலா ஓரிடத்தைக் குறைத்துக் கொண்டு 5 தொகுதிகளில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டு, தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டில் இன்று(மார்ச் 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டது.

ஆனால், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள்  முடிந்தபோதிலும் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், 6 தொகுதிகளுக்கும் குறைவு என்றால் திமுக கூட்டணியிலிருந்து விலகிப் போட்டியிடுவதென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி நாளை, வியாழக்கிழமை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றிரவு தொடர்ந்து பேசப்பட்டால் சமாதானம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Summary

Informed sources say that the Marxist Communist Party has decided to withdraw from the alliance if it gets fewer seats than the number of seats it contested in the last assembly election.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.