சென்னையில் வர்தா புயலால் தொலைத்தொடர்பு சாதனங்களில் சிக்னல் பிரச்சினை காரணமாக பெட்ரோல் பங்குகளில் டெபிட், மற்றும் கிரெடிட் கார்டுகள் நிராகரிப்பு!

பெரும்பான்மையான பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்கெட்டுகள், மற்றும் ரெஸ்டாரெண்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை
சென்னையில் வர்தா புயலால் தொலைத்தொடர்பு சாதனங்களில் சிக்னல் பிரச்சினை காரணமாக பெட்ரோல் பங்குகளில் டெபிட், மற்றும் கிரெடிட் கார்டுகள் நிராகரிப்பு!
Updated on
1 min read

நேற்றைய அதி தீவிர வர்தா புயலால் தொலை தொடர்பு சாதனங்களில் கடுமையான சிக்னல் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக இன்று சென்னையில் பெரும்பான்மையான பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்கெட்டுகள், மற்றும் ரெஸ்டாரெண்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இது இன்று காலையில் நேற்றைய கடும் புயலுக்குப் பின் பணிக்குத் திரும்பும் மனநிலையில் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வந்த மக்களிடையே பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. முன்னதாக ரூபாய் நோட்டுப் பிரச்சினையால் இன்று வரையிலும் தொடரும் பணமில்லா ஏடிஎம்கள், புயலை முன்னிட்டு நிறுத்தப் பட்ட மின்சார வசதிகள், கூடுதலாக சேமித்து வைத்துக் கொள்ள முடியாத அத்யாவசியப்பொருட்கள், இவற்றோடு இன்றும் இன்னும் ஓரிரு தினங்களுக்கும் நீடிக்கலாம் என நம்பப் படும் இந்த தொலைத் தொடர்பு சாதன சிக்னல் பிரச்சினைகளால் சென்னை மக்கள் மேலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரின் உட்புறத்தில் இன்று மாலைக்குள்ளும், பிற புறநகர்ப் பகுதிகளில் இன்னும் ஓரிரும் தினங்களிலும் மீட்புப் பணிகள் அதி விரைவாக நடைபெற்று புயலால் உண்டான அழிவுகள் அனைத்தும் சீரமைக்கப் படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com