நாளை முதல் தினமணி.காம் ஜங்க்ஷனில் 'கருந்தேள்' ராஜேஷ் எழுதும் புதிய தொடர் ஆரம்பம்!

நாளை முதல் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று நமது தினமணி.காமின் 'ஜங்ஷன்' பகுதியில் புகழ் பெற்ற  திரை விமர்சகர் மற்றும் திரைக்கதை ஆலோசகர் 'கருந்தேள்' ராஜேஷின் கைவண்ணத்தில் புதிய தொடர்... 
நாளை முதல் தினமணி.காம் ஜங்க்ஷனில் 'கருந்தேள்' ராஜேஷ் எழுதும் புதிய தொடர் ஆரம்பம்!
Updated on
1 min read

சென்னை: நாளை முதல் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று நமது தினமணி.காமின் 'ஜங்ஷன்' பகுதியில் புகழ் பெற்ற  திரை விமர்சகர் மற்றும் திரைக்கதை ஆலோசகர் 'கருந்தேள்' ராஜேஷின் கைவண்ணத்தில் புதிய தொடர் வெளிவர உள்ளது.

பிரபல திரை விமர்சகர் மற்றும் திரைக்கதை ஆலோசகர் 'கருந்தேள்' ராஜேஷ், நமது தினமணி.காம் வாசகர்களுக்காக, இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஜங்ஷன் பகுதியில் ‘இதயம் தொட்ட இசை’ என்ற புதிய தொடரை எழுத உள்ளார்.

தொடர் பற்றி:

இந்தியாவில் – தமிழகத்தில் பாடல்களின் மூலமாகவேதான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். அப்படிப்பட்ட பாடல்களை நமக்கு வழங்கிய பல அட்டகாசமான இசையமைப்பாளர்களைப் பற்றியும், அவர்களின் பாடல்களையும் பற்றித்தான் இந்தத் தொடரில் கவனிக்கப் போகிறோம். இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், திரைப்படங்கள் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்தத் தொடரில் அலசப் போகிறோம். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல பாடல்களைப் பார்க்கப் போகிறோம். மனிதர்களை இணைக்கும் கலை வடிவங்களில் இசையே முதன்மையானது என்ற வகையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு அப்பாடலின் மூலம் பெருகும் இசையை இந்த தொடரில் அனுபவிக்கலாம் வாருங்கள்.

==============================================================

எழுத்தாளர் பற்றி:

’கருந்தேள்’ ராஜேஷ், திரைப்படங்களைப் பற்றி விரிவாக அலசும் விமர்சகர். தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைகளை செப்பனிட்டுக்கொடுக்கும் திரைக்கதை ஆலோசகராகவும் (Screenplay Consultant) இருக்கிறார். ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற வெற்றிகரமான புத்தகத்தை எழுதியவர். பல பத்திரிக்கைகளில் தொடர்ந்து திரைப்படங்களைப் பற்றி விரிவாக எழுதி வருகிறார். வீடியோ கேம்கள், பாடல்கள், உலக சினிமா, டாரண்டினோ, கய் ரிட்சீ, David Fincher, இயக்குநர் ஸ்ரீதர், மணிவண்ணன், ஆர்.டி & எஸ்.டி பர்மன்கள், ஏ.எம்.ராஜா, கிஷோர் குமார், எம்.எஸ்.வி, ஆர்தர் கானன் டாயல், தேவன், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியவைகள் இவருக்குப் பிடித்த விஷயங்களில் சில. கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது குடும்பத்தோடு பெங்களூருவில் வசிக்கிறார். www.karundhel.com என்ற வலைத்தளத்தில் பல வருடங்களாகத் திரைப்படம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும், தொடர்களையும், வீடியோ கேம் விமர்சனங்களும் எழுதி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com