
4 நாள் சுற்றுப் பயணமாக பஞ்சாப் சென்றிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அமிர்தசரஸ் செல்வதற்காக லூதியானாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டார்.
அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற வாகனம் ஒன்று கேஜ்ரிவால் இருந்த காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. இந்த வாகன அணிவகுப்பு ஜலந்தர்–அமிர்தசரஸ் சாலையில் பாப் சவுக் அருகே சென்று கொண்டிருந்த போது, கேஜ்ரிவால் பயணம் செய்த கார் திடீரென முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது மோதியது.
இதில் காரின் முன்பகுதி சிறிது சேதமடைந்தது. எனினும் இந்த விபத்தில் கேஜ்ரிவாலும், அவருடன் காரில் இருந்த பகவந்த் சிங் மன், குர்பிரீத் கக்கி உள்ளிட்ட கட்சி தலைவர்களும் காயம் இன்றி தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.