காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்னட சலுவளி வட்டாள் கட்சி தலைவர் வட்டாள் நாகராஜ், கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் வரும் 19-ஆம் தேதி கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருமாநில எல்லை நுழைவு பகுதியை மூடும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாகவும், பெங்களூருவில் நடந்த கலவரத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.