
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவிரிப் பிரச்னை தொடர்பாக இன்று மாநிலம் தழுவிய ரயில் மறியலில் ஈடுபடப் போவதாக கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக பெங்களூரில் உள்ள புரட்சியாளர் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் உள்பட மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காவிரி பிரச்னை தொடர்பாக மாண்டியாவில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பினரை தடுத்தி நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.