பாகுபலி பிரபாஸ் திருமணம் குறித்த சர்ச்சை!

தற்போது 35 வயதைக் கடந்து விட்ட பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்பது தான் டோலிவுட்டில் இப்போதைய ஹாட் டாக். 
பாகுபலி பிரபாஸ் திருமணம் குறித்த சர்ச்சை!
Updated on
2 min read

தமிழில் நடிகர் விஷாலின் திருமணத்தைப் பற்றி எப்படி பரபரப்பான ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறதோ அதே போல, அதை விட சற்று அதிகமாகவே பிரபாஸ் திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அக்கட பூமியில் அனலடித்துக் கிடக்கிறது. பாகுபலி திரைப்படம் மூலமாக பிரபாஸுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள் என்பதைத் தாண்டி தெலுங்கில் அவர் பாகுபலி திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே அங்கு மக்களின் மனம் கவர்ந்த டார்லிங் நடிகராகவே இருந்தார். திரிஷாவுடன் நடித்த வர்ஷம், பாகுபலிக்கு முன்னரே ராஜ மெளலி இயக்கத்தில் சத்ரபதி, ரெபெல், டார்லிங் மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அங்கு ‘ரெபெல் ஸ்டார என மக்கள் கொண்டாடிய நாயகர்களில் ஒருவராகவே இருந்தார். தற்போது 35 வயதைக் கடந்து விட்ட பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்பது தான் டோலிவுட்டில் இப்போதைய ஹாட் டாக். 

பாகுபலி 1 திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது இதே கேள்வி தன்னை நோக்கி நீண்ட போது; பாகுபலி 2 ஐ முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிரபாஸ் கூறி இருந்தார். பிரபாஸின் பெரியப்பாவும் பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு; இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்; பிரபாஸ் திருமணம் வீட்டினர் நிச்சயிக்கும் திருமணமாக இருக்குமென்றும், அவருக்குப் பொருத்தமான மணப்பெண்ணை பிரபாஸின் அம்மாவும், பெரியப்பாவான தன் குடும்பமும் இணைந்து தேடும். பாகுபலி- 2 வெளிவந்ததும்... அதைத் தொடர்ந்து விரைவில் பிரபாஸ் திருமண அறிவிப்பும் வரும்’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இப்போது பிரபாஸ் திருமண எதிர்பார்ப்புச் செய்தியானது மீண்டும் பழைய இடத்துக்கே வந்து நிற்கிறது. தொடர்ந்து பாகுபலி- 2 படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு ரசிகர்களையும், செய்தியாளர்களையும் சந்தித்து வரும் பிரபாஸ்... அப்படியான நிகழ்வொன்றில், தனது திருமணம் குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம். ‘என் திருமணம் குறித்து யாருக்குத் தெரியும்? யாருக்குமே தெரியாது... ஏன் எனக்கே கூட அதைப்பற்றி ஒன்றும் தெரியாது’ எனக்கூறி இருக்கிறார்.

இந்த பதில் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் ஒரு வேளை பிரபாஸ் திருமண விசயத்தில் பாலிவுட் டான் நடிகர் சல்மான் கானைப் பின்பற்றவிருக்கிறாரா? என்ற குழப்பம் ஏற்பட்டு விட்டது அவர் ரசிகர்களுக்கு. சல்மான் கான் 50 வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இந்தி திரைப்படங்களில் கலக்கிவருவதைப் போல பிரபாஸ் இந்தியத் திரைப்படங்களில் கலக்குவது ஒன்றையே தனது லட்சியமாக வைத்திருக்கிறாரோ என்னவோ? எவரறிவர்?

டோலிவுட் நியூஸ் இப்படி இருக்க, இங்கே கோலிவுட்டில் விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின், அந்தக் கட்டடத்தின் உள் அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருக்கையில் தனது திருமணத்தை அறிவிக்க இருப்பதாக கூறி இருக்கிறார். எப்படியோ இந்த இரண்டு பேச்சிலர்களும் தங்களது நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்கப் போவது எப்போது? என்பது தான் கோலிவுட், டோலிவுட் இரண்டிலுமே தற்போதைய சென்சேஷனல் எதிர்பார்ப்பு.

Image coutrsy: you tube, google.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com