என் கணவரின் தொடர் வெற்றிகளுக்கான காரணம் இதுவே: சொல்கிறார் ரமா ராஜமெளலி!

மனைவி என்றில்லை ராஜ மெளலிக்கு இதுவரை யாருடனும் எந்த ஒரு விசயத்துக்காகவும் ஈகோ மோதல் என ஒன்று வந்ததில்லை. ஏனெனில் யார் மாற்றுக் கருத்தை முன் வைத்தாலும், யார் என்ன சொன்னாலும்
என் கணவரின் தொடர் வெற்றிகளுக்கான காரணம் இதுவே: சொல்கிறார் ரமா ராஜமெளலி!
Updated on
1 min read

பாகுபலி வெற்றி குறித்து உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் தன் கணவரின் வெற்றிக்கான காரணங்களாக பலர் பலவிசயங்களைச் சொல்லிப் பாராட்டிக் கொண்டிருந்த போதும், அவரது வெற்றிக்கான மிகப்பெரிய காரணமாக ராஜமெளலியின் மனைவியும், பாகுபலி1& 2 திரைப்படங்களின் காஸ்டியூம் டிசைனருமான ரமா ராஜ மெளலி என்ன கூறுகிறார் தெரியுமா? 

ராஜமெளலிக்கு யாரிடத்தும் ஈகோவே கிடையாது என்பது தான் அது.

கணவனது வேலைக்குள் மனைவியும் இன்வால்வ் ஆகும் போது எப்போதுமே சிறு சிறு ஈகோ மோதல்கள் வரக்கூடும். அவை நீர்குமிழிகள் போன்றவை. ஆனால் ராஜமெளலியின் முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் முதல் இன்றைய மெகா மெகா ஹிட் பாகுபலி வரை உடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரமா ராஜமெளலிக்கும், அவரது கணவர் ராஜமெளலிக்கும் இடையில் எப்போதும், எந்தக் காலத்திலும் அணுவளவு கூட ஈகோ மோதல் வந்ததே இல்லை என்கிறார் ரமா.

மனைவி என்றில்லை ராஜ மெளலிக்கு இதுவரை யாருடனும் எந்த ஒரு விசயத்துக்காகவும் ஈகோ மோதல் என ஒன்று வந்ததில்லை. ஏனெனில் யார் மாற்றுக் கருத்தை முன் வைத்தாலும், யார் என்ன சொன்னாலும், அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? என யோசிக்கவே முயற்சிப்பாராம் ராஜமெளலி. அது ரமா ராஜமெளலியாகவே இருந்தாலும் சரி, இல்லை எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியாக இருந்தாலும் சரி ராஜமெளலி சொல்பவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. ஏன் அவர்கள், அவ்வாறு சொல்கிறார்கள்? என்று யோசித்து அதை சரி செய்யவே முயற்சிப்பாராம். அவரது நோக்கில் ஒரு வேலையைச் செய்யும் போது, யார் வேண்டுமானாலும் அவரகளது யோசனைகளையும், கருத்துகளையும் அவரிடம் சொல்லலாம். அவர் அதை அலட்சியப்படுத்த மாட்டார். இன்புட் எத்தனைகெத்தனை அதிகமாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை புராடக்ட் நன்றாக உருவாகும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் ராஜமெளலி. தனது வெற்றிகளுக்கான இன்புட் தனது மூளையிலிருந்து மட்டுமே தான் வரவேண்டும் என்ற ஈகோ ராஜமெளலியிடம் எப்போதுமே கிடையாது. அதுவே அவரது வெற்றிகளுக்கான முதல் காரணம் என்கிறார் ரமா.

Image courtsy: google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com