எமிரேட்ஸ் விமானத்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளனது பாகுபலி டீம்!

EK526 எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாங்கள் துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு திரும்பும் போது கேட் B4 இருந்த ஏர்லைன்ஸ் விமான ஊழியர் ஒருவர் தங்களிடம் மிகுந்த வெறுப்புணர்வுடன்
எமிரேட்ஸ் விமானத்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளனது பாகுபலி டீம்!
Published on
Updated on
1 min read

பாகுபலி- 2 திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக பாகுபலி திரைப்படக் குழு சார்பாக படத்தில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி, தயாரிப்பாளர் சோபு யர்லகடா, ஹீரோ பிரபாஸ், ஹீரோயின் அனுஷ்கா உள்ளிட்ட 5 பேர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது எமிரேட்ஸ் விமான சேவை ஊழியர்களில் ஒருவர் தங்களிடம் வேண்டுமென்றே எந்தவித காரணமும் இன்றி கடுமையாக நடந்து கொண்டு தங்களைத் துன்புறுத்தியதாக விமானத்தில் பயணித்தவரும் படத்தின் தயாரிப்பாளருமான சோபு யர்லகடா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக  சோபுவின் ட்வீட்கள்...


இது பற்றி விளக்கமாகத் தெரிவிக்கையில், EK526 எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாங்கள் துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு திரும்பும் போது கேட் B4 இருந்த ஏர்லைன்ஸ் விமான ஊழியர் ஒருவர் தங்களிடம் மிகுந்த வெறுப்புணர்வுடன் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அவருக்கு இனவெறி இருக்கக் கூடும் எனத் தான் சந்தேகிப்பதாகவும் சோபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தான் பலமுறை எமிரேட்ஸ் விமான சேவையைப் பயன்படுத்தி இருந்த போதும் இப்படியொரு இனரீதியான தாக்குதலைச் சந்தித்தது இதுவே முதல் முறை எனவும், இது மிகவும் மோசமான மனப்பான்மை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Image courtsy: google & twiter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com