வாஜ்பாய் பிறந்தநாளன்று அவரது வாழ்க்கை வரலாறு திரைப்பட அறிவிப்பு வெளியீடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளான இன்று அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வாஜ்பாய் பிறந்தநாளன்று அவரது வாழ்க்கை வரலாறு திரைப்பட அறிவிப்பு வெளியீடு

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 93-ஆவது பிறந்த தினம் டிசம்பர் 25-ந் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அவரது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், வாழ்க்கை வரலாறு திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 5 முறை, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். 

இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் எடுக்கப்போவதாக இயக்குநர் மயங்க் பி. ஸ்ரீவஸ்தவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படத்துக்கு 'யுகபுருஷர் அடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இயக்குநர் கூறியதாவது:

அடல் பிகாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இது முழுவது அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் தொடர்பாகவும், திரைப்பட உருவாக்கம் தொடர்பாகவும் வாஜ்பாய் குடும்பாதினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். வாஜ்பாய் குடும்ப உறுப்பினர் மாலா திவாரி எங்களுக்கு இந்த திரைப்பட உருவாக்கத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் ராஜீவ் தமிஜா, அமித் ஜோஷி, ரஞ்சித் ஷர்மா ஆகியோரது ஸ்பெக்ட்ரம் மூவி பேனர்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. பசந்த் குமார் என்பவர் இதற்கு திரைக்கதை எழுதியுள்ளார். பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தற்போது அமெரிக்காவில் உள்ள இசையமைப்பாளர் பப்பி லஹரி இதுகுறித்த விடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்காக நான் ஏற்கனவே ஒரு பாடலை தயார் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளி ஆசிரியர் குடும்பத்தில் டிசம்பர் 25, 1924-ல் பிறந்தவர் வாஜ்பாய். பின்னர் சிறு வயதிலேயே வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு பின்னாளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து தனது பொது வாழ்வை துவக்கியவர். 

பின்னர் 1996-ம் ஆண்டு ஏற்பட்ட ஜன சங்க ஆட்சியில் பிரதமராகப் பொறுப்பேற்று 13 நாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்தார். இதையடுத்து ஏற்பட்ட பாஜக ஆட்சியில் மார்ச் 19, 1998 முதல் மே 22, 2004 வரையிலான காலகட்டத்தில் இந்திய பிரதமராக இருந்தவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com