
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாங்கும் சொகுசு கார்களுக்கு புதுச்சேரியில் உள்ள குடியிருப்பின் அடிப்படையில் அங்கு பதிவு செய்து வருவது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதன் அடிப்படையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாலை போக்குவரத்துத் துறை அதிகாரி கடந்த ஒரு மாதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட கேரள பிரபலங்களின் சொகுசு கார்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், கேரள அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையை கேரள அரசாங்கம் சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் நடிகர் ஃபஹத் ஃபாஸில், அம்மாநில காவல்துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் வெளியாகியுள்ள வேலைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.