சாப்பிட மறுத்த குழந்தையைக் அடித்துக் கொன்ற வித்யாசமான அம்மா!

உடல்நலமற்ற ஒரு சிறுவனை சாப்பிட மறுத்ததைக் காரணமாக்கி பெற்ற தாயே அடித்துக் கொன்றது ஊர் மக்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சாப்பிட மறுத்த குழந்தையைக் அடித்துக் கொன்ற வித்யாசமான அம்மா!
Updated on
1 min read

ஹைதராபாத் சிவரெட்டிபேட்டையில் கடந்த சில மாதங்களாகத் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார் பமீனா பேகம். 35 வயது பமீனா பேகம் கடந்த 5 வருடங்களாகத் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். சம்பவ தினத்தன்று இரவில் சாப்பிடாமல் உறங்கி விட்ட தனது 12 வயது இளைய மகன் ரெஹானை சாப்பிட்டு விட்டுத் தூங்கச் சொல்லி பமீனா வற்புறுத்து இருக்கிறார். ஆனால் சிறுவன் மறுத்ததால் பமீனா அவனைத் திட்டிக் கொண்டே தொடர்ந்து கடுமையாக அடித்ததில் சிறுவனின் தலை சுவற்றில் இடித்து அவனது உடல்நிலை மோசமாகி சிறுவன் இறந்து விட்டான். மகன் இறந்து விட்டதை அறிந்த பமீனா பக்கத்து கிராமத்தில் வசித்த தனது தாயை வரவழைத்து யாருக்கும் தெரியாமல் சடலத்தை எரித்து விட முயற்சித்திருக்கிறார். இதில் உஷாரான சிவரெட்டிபேட்டை பொது மக்கள் காவல்துறைக்கு புகார் அளித்த பின் பமீனாவும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதில் மிகவும் வருத்தத்திற்குரிய விசயம் இறந்த போது சிறுவன் ரெஹான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறான். உடல்நலமற்ற ஒரு சிறுவனை சாப்பிட மறுத்ததைக் காரணமாக்கி பெற்ற தாயே அடித்துக் கொன்றது ஊர் மக்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இவ்வழக்கில் செக்சன் 304 பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறுவனின் போஸ்ட் மார்டம் அறிக்கை வெளியான பின் பமீனாவுக்கும், அவரது தாயாருக்கும் தண்டனை உறுதி செய்யப்படும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com