இன்றைய இணைய வைரல்: சென்ற வேகத்தில் செல்ஃபீ எடுத்து வெளியிட்ட மான்ஸ்டர் ராக்கெட் GSLV Mark 3!

இன்றைய இணைய வைரல்: சென்ற வேகத்தில் செல்ஃபீ எடுத்து வெளியிட்ட மான்ஸ்டர் ராக்கெட் GSLV Mark 3!

‘ஃபேட் பாய்’ என்று செல்லமாக அழைக்கப்படும் GSLV MARK 3,  இந்தியா இதுவரை தயாரித்த ராக்கெட்டுகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த, மிக மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளில் முதன்மையானது.
Published on

‘ஃபேட் பாய்’ என்று செல்லமாக அழைக்கப்படும் GSLV MARK 3,  இந்தியா இதுவரை தயாரித்த ராக்கெட்டுகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த, மிக மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளில் முதன்மையானது. அதன் எடையைக் கணிக்க வேண்டுமானால் 200 யானைகளின் பலம் கொண்டது என்று சொல்லலாம் அல்லது 5 ஜம்போ ஜெட்டுகளுக்கு இணையான எடை கொண்டது என்று கூறலாம். இந்த மீத்திறன் வாய்ந்த GSLV Mark 3 ராக்கெட்டை ISRO கடந்த திங்களன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஏவிய மாத்திரத்தில் ராக்கெட் தன்னைத்தானே செல்ஃபி எடுத்து அனுப்பியது. அந்த செல்ஃபி தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ட்விட்டர் தளத்தில் இந்த செல்ஃபீ புகைப்படம் பலமுறை ரீ ட்வீட் செய்யப்பட்டு ஹிட் அடித்துக் கொண்டிருப்பது தான் தற்போதைய இணைய வைரல். எல்லாவற்றுக்கும் மேலாக என் டி டி வி இந்தியாவின் அதிக எடை கொண்ட இந்த ராக்கெட்டுக்கு ’பாகுபலி ராக்கெட்’ என்று வேறு பெயரிட்டுக் குறிப்பிட்டிருப்பது இன்னும் வேடிக்கை! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com