கூட்டத்தில் பேசினார் அனுபம் கெர், கொட்டாவி விட்டார் இளம்பெண்! 

தான் விட்ட கொட்டாவி தான் அனுபம் கெரை மேடையிலிருந்து கீழே இறக்கியது என்று உணர்ந்ததும் அவர் வெட்கத்துடன் சிரிக்கத் தொடங்க மொத்தக் கூட்டமும் அவர்களைப் பார்த்து கைதட்டி ஆர்ப்பரித்தது. 
கூட்டத்தில் பேசினார் அனுபம் கெர், கொட்டாவி விட்டார் இளம்பெண்! 
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் மிகவும் வேடிக்கையான மனிதர்.

அனுபம் கெர் சமீபத்தில் மகாராஷ்டிராவின் தர்மபுரி நகரில் ‘நர்மதா தேவி நானாமி’ எனும் ஒரு சமூக சேவை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். குறிப்பிடத் தக்க அளவில் அரசியல் வி.ஐ.பிக்களும், நூற்றுக் கணக்கான பொதுமக்களும் பங்கு பெற்ற இந்த நிகழ்வில் முன் வரிசையில் இருந்த பெண்மணி ஒருவர் அனுபம் கெர் பேசத் தொடங்கியதும் கொட்டாவி விட்டார். பேச்சின் இடையில் இதைக் கவனித்த அனுபம் கெர் உடனே தனது பேச்சை நிறுத்தி மேடையில் இருந்து இறங்கி தண்ணீர் பாட்டிலை எடுத்து கூட்டத்தினரிடையே அளித்து அந்தப் பெண்ணிடம்  “நீர் அருந்துங்கள், இது கொஞ்சம் வேடிக்கை தான்” என்றதும் அந்தப் பெண் ஆச்சர்யத்தில் ஒரு கணம் பேச்சிழந்தார். ஆனால் அடுத்த நொடி அவருக்கு சிரிப்பு வந்து விட்டது. தான் விட்ட கொட்டாவி தான் அனுபம் கெரை மேடையிலிருந்து கீழே இறக்கியது என்று உணர்ந்ததும் அவர் வெட்கத்துடன் சிரிக்கத் தொடங்க மொத்தக் கூட்டமும் அவர்களைப் பார்த்து கைதட்டி ஆர்ப்பரித்தது. 

அனுபம் கெரின் வேடிக்கையைக் காண; கீழே உள்ள வீடியோவைக் காணுங்கள்

யாருக்குத் தெரியும்? இந்த வீடியோ வெகு விரைவில் அனுபம் கெரின் இன்ஸ்டாகிராமில் ‘நான் பேசும் போது கொட்டாவி விட்ட பெண்’ எனும் தலைப்புடன் பகிரப்படலாம். அவர் தான் ஒரு வேடிக்கையான மனிதராயிற்றே!.

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் மேடையில் பேசும் போதும் கீழே யாரும் கொட்டாவி விட்டால், அதைப் பார்த்தும், பாராதது போலக் கடந்து மேற்கொண்டு பேசிக் கொண்டே செல்வார்கள். இது அவர்களது பேச்சில் சுவாரஸ்யம் இல்லை என நினைப்பவர்களுக்கு பெரும் சோதனையாக இருக்கும். ஆனால் பேசிக் கொண்டிருப்பவரே பேச்சை நிறுத்தி கொட்டாவி விட்டவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்ததால் மேற்கொண்டு அந்தப்பெண்மணி அனுபம் கெரின் பேச்சை சுவாரஸ்யமாகக் கவனித்திருக்கவும் கூடும். தமது பேச்சைக் கவனிக்க வைக்க இப்படியும் ஒரு உத்தி இருக்கிறது. என்பதை அனைத்துப் பேச்சாளர்களும் நோட் செய்து கொள்ளுங்கள்.

Image courtsy: google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com