முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 93-ஆவது பிறந்த தினம் டிசம்பர் 25-ந் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அவரது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், வாழ்க்கை வரலாறு திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 5 முறை, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் எடுக்கப்போவதாக இயக்குநர் மயங்க் பி. ஸ்ரீவஸ்தவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படத்துக்கு 'யுகபுருஷர் அடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இயக்குநர் கூறியதாவது:
அடல் பிகாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இது முழுவது அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் தொடர்பாகவும், திரைப்பட உருவாக்கம் தொடர்பாகவும் வாஜ்பாய் குடும்பாதினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். வாஜ்பாய் குடும்ப உறுப்பினர் மாலா திவாரி எங்களுக்கு இந்த திரைப்பட உருவாக்கத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் ராஜீவ் தமிஜா, அமித் ஜோஷி, ரஞ்சித் ஷர்மா ஆகியோரது ஸ்பெக்ட்ரம் மூவி பேனர்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. பசந்த் குமார் என்பவர் இதற்கு திரைக்கதை எழுதியுள்ளார். பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள இசையமைப்பாளர் பப்பி லஹரி இதுகுறித்த விடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:
இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்காக நான் ஏற்கனவே ஒரு பாடலை தயார் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளி ஆசிரியர் குடும்பத்தில் டிசம்பர் 25, 1924-ல் பிறந்தவர் வாஜ்பாய். பின்னர் சிறு வயதிலேயே வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு பின்னாளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து தனது பொது வாழ்வை துவக்கியவர்.
பின்னர் 1996-ம் ஆண்டு ஏற்பட்ட ஜன சங்க ஆட்சியில் பிரதமராகப் பொறுப்பேற்று 13 நாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்தார். இதையடுத்து ஏற்பட்ட பாஜக ஆட்சியில் மார்ச் 19, 1998 முதல் மே 22, 2004 வரையிலான காலகட்டத்தில் இந்திய பிரதமராக இருந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்
ஜமைக்கா பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு!

காட்டுமன்னாா்கோவில்: விசிக வெற்றி

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


