
அண்மையில் ஐபிஎல் போட்டியைக் காண ஸ்டேடியத்திற்கு செல்லாதீர்கள்! என்று ஜேம்ஸ் வசந்தன் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.' என்று கூறியிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.
தற்போது முகநூலில் ஒரு பதிவில் அவர் தெரிவித்திருப்பது, ‘தமிழக மக்களே! தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வேண்டுமென்றே பல அநீதிகளைச் செய்துவருகிற மத்திய அரசு, இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இன்று இரவு அகங்காரமாக, அவசரமாக இழைத்திருக்கிற அநீதியைப் பாருங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அவசரமாக ஒரு துணைவேந்தரை நியமித்திருக்கிறார் ஆளுனர்.
சூரப்பா என்பவரை.. கர்நாடகத்திலிருந்து..!
1. நமது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக தமிழகத்தில் ஒருவருக்குக் கூட தகுதி இல்லையா?
2. கர்நாடகத்தில் இருந்துதான் வரவேண்டுமா?
அரசியல் கடந்து சிந்தியுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.