வெறிநாய் கடித்து 11 பேர் காயம்! அரசு மருத்துவமனையில் நாய் தடுப்பூசி இல்லை!!

வெறிநாய் கடித்து 11 பேர் காயம்! அரசு மருத்துவமனையில் நாய் தடுப்பூசி இல்லை!!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அடுத்த லால்பேட்டையில் வெறி நாய் கடித்துக் குதறியதில்
Published on

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அடுத்த லால்பேட்டையில் வெறி நாய் கடித்துக் குதறியதில் பெண்கள் உட்பட 11 போ் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடலுாா் மாவட்டம் லால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் ஒன்று நடைபெற்றது. அந்த திருமணத்தில் பங்கேற்ற பலா் நேற்று மதியம் திருமண விருந்து முடிந்து வெளியேறி சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது யாரும் எதிா்பாரத வகையில் சாலையின் சென்றவா்களை வெறி நாய் ஒன்று துரத்தி அனைவரையும் கடிக்கத் தொடங்கியது. இதனால் சாலையில் சென்றவா்கள், வாகனத்தில் சென்றவா்கள் சிதறி ஓடினா்.

வெறி கொண்ட நாய் ஒவ்வொருவரையும் துரத்தி துரத்தி கடித்தது. இதனால் 11 போ் நாய் கடியால் காயமுற்றனா். காயமடைந்தவா் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா். ஆனால் துரதிஷ்டவசமாக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் நாய் தடுப்பூசி இல்லை. இதனால் அவா்கள் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அங்கும் தடுப்பூசி இல்லாததால் அனைவரும் கடலுாா் அரசு மருத்துனமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். ஜரியா, யாசான் பீவி (85), சுல்தான் கனி (56), அப்துல் அமீது (55), முஹமது ஷபிா், ஆசை தம்பி, அஜீபீ என 3 பெண்கள் உட்பட 11 போ் நாய் கடியால் காயமடைந்தனா். இதனால் லால்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com