இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!

தினமும் காரில் அலுவலகம் மற்றும் ஷாப்பிங் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
Published on
Updated on
1 min read

தினமும் காரில் அலுவலகம் மற்றும் ஷாப்பிங் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் நிறுவனங்களான ஓலா, மற்றும் ஊபர் உள்ளிட்ட சில சர்வதேச நிறுவனங்கள்தான். தற்போது இவர்களுக்குப் சவால் விடும் விதத்தில் களம் இறங்கியுள்ளது சென்னை ஓட்டுநர்களின் ‘ஓடிஎஸ்’ என்ற புதிய கேப் சர்வீஸ்.

ஓலா மற்றும் ஊபரில் ப்ரைம் டைம் எனப்படும் காலை அலுவலகம் செல்லும் நேரமான 8 - 10 வரை மற்றும் மாலை 5 மணியிலிருந்து 8 வரை வழக்கமான கட்டணத்தை விட பன்மடங்கு அதிகமாக பணம் வசூலிக்கப்படும். கேப் ஓட்டுநர்களிடமும் அதிகப் பணத்தை கமிஷனாக இந்நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன. மேலும் இந்நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் 20% வருமானத்தையும் ஜிஎஸ்டியையும் பிடித்து கொள்கின்றன. ஓட்டுநர்கள் இதனை எதிர்த்து சில போராட்டங்களை நிகழ்த்தினர் ஆனால் பலமிக்க கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கடுமையான சூழல்களால் ஓலா மற்றும் ஊபரில் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை விட்டுத்தர வேண்டியதாகிவிட்டது.

இந்நிலையில், அத்தகைய ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓடிஎஸ் (OTS) அதாவது ஓட்டுநர்கள் தோழர்கள் சங்கம் என்ற புதிய கால் டாக்ஸி சேவை நிறுவனத்தை தொடங்கி விட்டனர். ப்ரைம் டைம், பீக் டைம் என்று பாகுபாடு இல்லாமல் எல்லா நேரங்களிலும் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் இதன் ப்ளஸ் பாயிண்ட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com