மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் முதல் ஃபேஸ்புக் பதிவு இதுதான்!

பிரபல அறிவியலாளர், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானி,
மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் முதல் ஃபேஸ்புக் பதிவு இதுதான்!

பிரபல அறிவியலாளர், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானி, பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் (76) இன்று காலை காலமானார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963-ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர்.

இங்கிலாந்த் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். நரம்பு நோயல் பாதிக்கப்பட்ட இவர், குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு, பிரபஞ்ச கருங்குழி உள்ளிட்டவற்றை உருவாக்கியவர். இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.

நவீன யுகத்தின் முகமாகத் திகழும் ஃபேஸ்புக்கில் ஸ்டீபன் ஹாக்கிங் அக்கோபர் 7, 2014-ம் ஆண்டு அதிகாரபூர்வமான கணக்கைத் தொடங்கினார். ஃபேஸ்புக் மூலம் நேரடியாக பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்ட கருத்துக்கள், விவாதங்கள், விடியோக்கள் உள்ளிட்ட பல அறிவுசார் உலகத்தில் அதிகம் பகிரப்பட்டது. உடல்நிலைக் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 2, 2017-ல் ஃபேஸ்புக்கில் எழுதுவதை நிறுத்தியிருந்தார் ஹாக்கிங். அவரது அட்மின் மற்றும் குழுவினர் அவரது சமூக வலைத்தளங்களை நிர்வகித்து வந்தாலும் அவரே எழுதும் பதிவுகளை SH என்று இனிஷியல் போடுவார். அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனைக் கடந்த போது ஸ்டீபன் வேடிக்கையாக ஒரு ஹைகூ (அதுவும் விஞ்ஞானம் சார்ந்ததுதான்) அறிவித்து இந்தப் பதிவை போட்டிருந்தார். 

உலகம் முழுவதிலும் ரசிகர்களை கொண்ட ஹாக்கிங்கின் முதல் ஃபேஸ்புக் பதிவு இதுதான்: இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது எனக்கு எப்போதுமே ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கிறது. விண்வெளி உள்ளிட்ட எல்லாமே இப்போது பெரும் ஆச்சரியமான விஷயங்கள் இல்லைதான். எனினும் எனது வேட்கை தணியவில்லை. இன்று நாம் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருப்பதற்கான முடிவற்ற சாத்தியம் வந்துவிட்டது.  அதில் இணைய இப்போது எனக்கும் ஒரு வாய்ப்பு. எனது பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில்  ஆர்வமாக உள்ளேன்.  காத்திருங்கள். நானும் உடன் இருப்பேன். நல்வரவு, எனது பேஸ்புக்கை பார்வையிட்டமைக்காக நன்றி. ஸ்டீபன் ஹாக்கிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com