ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி! 8 ஜிபி டேட்டா இலவசம்!

டிஜிட்டல் உலக ஜீவிகளாக மாறிவிட்ட பலருக்கு ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் சலுகைகளைப் போல
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி! 8 ஜிபி டேட்டா இலவசம்!
Published on
Updated on
1 min read

டிஜிட்டல் உலக ஜீவிகளாக மாறிவிட்ட பலருக்கு ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் சலுகைகளைப் போல வேறெந்த நிறுவனமும் அளித்ததில்லை எனலாம். அந்தளவுக்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கும் ஜியோ நிறுவனம் தற்போது 8-ஜிபி டேட்டா இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் துவங்கியதும், ஜியோ நிறுவனம் இந்தப் புதிய சலுகைகளை அறிவிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக ரூ. 251 ரீசார்ஜ் திட்டத்தில்  தினமும் 4ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 51 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில் தினமும் 4-ஜிபி டேட்டா வழங்கப்படும் என்ற செய்தி வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. மேலும் ரூ. 251 திட்டத்தில் கிரிக்கெட் டீஸர் என்னும் திட்டத்தை அறிவித்து அதில் கூடுதலாக 8-ஜிபி  டேட்டாவை வழங்கியது.

இதற்கெல்லாம் டாப்பாக தற்போதும் மீண்டும் ஒரு புதிய ஆஃபரை ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி, ரூ. 101 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதலாக 8-ஜிபி டேட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது, நாளுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மே 25 முதல் மே 29 வரை 5 நாட்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோவின் மற்றொரு அறிவிப்பு என்னவென்றால் Add on Offer சலுகையொன்றினை தமது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அதன்படி வாடிக்கையாள்ரகள் பேசவோ அல்லது மெசேஜ் அனுப்பவோ முடியாது, ஆனால் டேட்டாவை பயன்படித்தி விடியோ மற்றும் இணைய சேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com