
ஐ.ஐ.டியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்களது வேலைகளை விட்டுவிட்டு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒரு அரசியல் கட்சியை தொடங்கி உள்ளனர்.
தேர்தல் ஆணையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இந்தக் குழுவினர், தங்களது கட்சிக்கு 'பஹுஜன் ஆஸாத்' எனப் பெயரிட்டுள்ளார்கள். 2019 மக்களவைத் தேர்தலில் இவர்கள் பங்கேற்கப் போவதில்லை. சற்று நிதானமாகவே அரசியல் களத்தில் இறங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதோடு, அடுத்த லோக் சபா தேர்தலுக்காகவும் நாங்கள் போட்டியிடுவோம் என்று 2015-ம் ஆண்டு ஐஐடி தில்லியில் பட்டம் பெற்றவரும் இந்தப் புதிய கட்சியின் தலைவருமான நவன் குமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.